×

கையெழுத்து போட்டுட்டு எங்க வேணாலும் போங்க – சிம்புவுக்கு மாநாடு தயாரிப்பாளர் செக்!

லாக்டவுனுக்கு மாநாடு படத்த்தை முடிக்காமல் சுசீந்தரன் படத்தில்  சிம்பு நடிக்க செல்லவுள்ளார் என்பது மாநாடு படக்குழுவினர் அதிர்ச்சியாகியுள்ளனர்.

 

லாக்டவுனுக்கு மாநாடு படத்த்தை முடிக்காமல் சுசீந்தரன் படத்தில்  சிம்பு நடிக்க செல்லவுள்ளார் என்பது மாநாடு படக்குழுவினர் அதிர்ச்சியாகியுள்ளனர்.

நடிகர் சிம்பு கொரோனா லாக்டவுனுக்கு முன்னர் வெங்கட் பிரபு இயக்கி வரும் மாநாடு படத்தில் நடித்து வந்தார். இதற்குப் பிறகு அவர் மிஷ்கின், சேரன் உள்ளிட்ட பல இயக்குனர்களிடம் கதை கேட்டு வரிசையாக அந்த படங்களில் நடிக்க உள்ளார். ஆனால் யாரும் எதிர்பாரா விதமாக  இப்போது இயக்குனர் சுசீந்தரன் இயக்கும் கிராமத்துக் கதை ஒன்றில் நடிக்க உள்ளதாக சொலல்ப்படுகிறது. இது மாநாடு படக்குழுவினருக்கு மிகெப்பெரிய அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

இந்நிலையில் இது பற்றி மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஃபெப்ஸி அமைப்பில் ஒரு புகாரைக் கொடுத்துள்ளாராம். அதன் படி நவம்பர் மாதம் மாநாடு படத்தின் படப்பிடிப்பை நவம்பர் மாதம் வைக்க உள்ளோம். அந்த மாதம் முழுவதும் படப்பிடிப்பு நடத்தி முடிக்கும் வரை சிம்பு என்னிடம் சம்பளம் கேட்கக்கூடாது. அதன் பிறகுதான் சம்பளம் தருவேன். அதற்கு சம்மதித்தால் மட்டுமே அவர் சுசீந்தரன் படத்தில் நடிக்க செல்லலாம் என சொல்லப்படுகிறது. இதனால் சிம்பு சுசீந்தரன் படத்துக்கு செல்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News