×

வாட்ஸ் அப்பை ஓரங்கட்டிய சிக்னல் ஆப்... இனி லவ் ஜோடிகளின் பேவரிட் இதானாம்
 

கூகுள் பிளே ஸ்டோரில் டாப் இலவச ஆப் என்ற பட்டியலில் வாட்ஸ் அப்பை முந்தி சிக்னல் ஆப் முதலிடம் பிடித்திருக்கிறது. 

 

பேஸ்புக் நிறுவனத்துக்குச் சொந்தமான வாட்ஸ் அப், இன்றைய சூழலில் உலக அளவில் அதிகப்படியான பயனாளர்களைக் கொண்ட ஆப் என்ற பெருமையைக் கொண்டிருக்கிறது. மாதாந்திர அளவில் 250 பில்லியன் பயனாளர்கள் வாட்ஸ் அப்பைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். 

ஆனால், வாட்ஸ் அப்பின் சமீபத்திய பிரைவசி கொள்கை மாற்றம் பெரும் சர்ச்சையாகியிருக்கிறது. வாட்ஸ் அப்பின் இந்தப் புதிய மாற்றங்களை ஏற்றூக்கொள்ளாவிட்டால், பிப்ரவரி 21-ம் தேதிக்குப் பிறகு அந்த செயலியைப் பயன்படுத்த முடியாது என்று தகவல் வெளியானது. ஆனால், இந்த சர்ச்சைக்கு வாட்ஸ் அப் வேறுவிதமாக விளக்கம் கொடுத்தது. வணிகரீதியிலான பயன்பாட்டுக்கு மட்டுமே அந்தக் கொள்கை பொருந்தும் என்று வாட்ஸ் அப் தெரிவித்திருந்தது. 


இந்தநிலையில், கூகுள் பிளே ஸ்டோரில் டாப் இலவச ஆப் என்ற பெருமையை வாட்ஸ் அப் போன்றே மெசேஜிங் சேவையை வழங்கிவரும் `சிக்னல்’ ஆப் முதன்முறையாகத் தட்டிப்பறித்திருக்கிறது. முழுக்க முழுக்க இலவச சேவை வழங்கிவரும் சிக்னல் ஆப், வாடிக்கையாளர்களின் பிரைவசிக்கு முக்கியத்துவம் கொண்டதாக இருக்கிறது என்று நெட்டிசன்கள் கமென்ட் செய்து வருகிறார்கள்.


 

From around the web

Trending Videos

Tamilnadu News