Categories: Cinema News latest news

எம்.ஜி.ஆராக மாற நினைக்கும் சிம்பு.?! என்ன செய்துள்ளார் பாருங்க..

நடிகர் சிம்பு தற்போது “சில்லுனு ஒரு காதல்” படத்தை இயக்கிய இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகும் “பத்து தல” எனும் படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தில் சிம்புடன் இணைந்து கௌதம் கார்த்தி, பிரியா பவானி சங்கர் டீஜே அருணாச்சலம், கலையரசன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு படத்தின் படப்பிடிப்பில் தான் இணைந்துள்ளதாக புகைப்படங்களை வெளியீட்டு சிம்பு அறிவித்திருந்தார்.

இதையும் படியுங்களேன்- வாங்குன அடி பத்தலையா.?! தனுஷ் வெளியிட்ட புது தகவலால் அதிர்ந்து போன ரசிகர்கள்…

இந்நிலையில், இந்த திரைப்படத்தில் நடிகர் சிம்பு பத்து தல படத்தில் சிம்பு கேஜிஆர் எனும் கதாபாத்திரத்தில் டானாக நடிக்கிறார். இந்த படத்தில் அவர் கதாபாத்திரத்திற்கு கேஜிஆர் என்ற தலைப்பு வைத்துள்ளது எம்ஜிஆராக மாற நினைக்கிறாரா ..? என சினிமா வட்டாரத்தில் கிசு கிசுக்கப்படுகிறது.

சிம்பு அதனால்தான் எம்ஜிஆர் போல எஸ்டிஆர் என தனது பெயரையும்  சுருக்கி வைத்துள்ளார எனவும், எம்ஜிஆர் போல மாற ஆசை படுகிறாரா எனவும் சில சினிமா வாசிகள் கலாய்த்து வருகிறார்கள். மேலும் சிம்பு நடிப்பில் வெந்து தணிந்தது காடு வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Manikandan
Published by
Manikandan