தீபாவளி ரேஸில் இருந்து பின்வாங்குகிறதா அரசன்?

 
Arasan

பெரிய இயக்குநர், பெரிய நடிகர் இணையும் படம் எப்போதுமே பண்டிகை தினங்களில் வந்தால் தியேட்டர்களில் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடி நன்றாக கல்லா கட்டலாம்.

இந்த 2026-ஆம் ஆண்டு தீபாவளிக்கு இயக்குநர் வெற்றிமாறன் இயக்கி வரும் 'அரசன்' ரிலீஸ் ஆவதாக இருந்தது. இதில் சிலம்பரசன் தான் கதையின் நாயகனாக வலம் வரப்போகிறார்.

முக்கிய ரோலில் விஜய் சேதுபதி நடித்து கொண்டிருக்கிறார். இப்படத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.

இதன் ஷூட்டிங் இன்னும் முடிவடையவில்லை. ஆதலால், தீபாவளி ரேஸில் இருந்து பின்வாங்கப்போகிறதாம். அடுத்த ஆண்டு (2027) பொங்கலுக்கு வெளியாக அதிக வாய்ப்பு இருக்கிறதாம்.

From Around the web