வெற்றிமாறனின் 'அரசன்' படத்தின் ஷூட்டிங் அப்டேட்டை கொடுத்த சிலம்பரசன்... வைரலாகும் வீடியோ!

 
Vetrimaaran Silambarasan arasan

நடிகர் சிலம்பரசன் - இயக்குநர் வெற்றிமாறன் காம்பினேஷனில் உருவாகி வரும் புதிய படம் தான் 'அரசன்'. இதில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதியும் முக்கிய ரோலில் நடிக்கிறார். 

அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்து வரும் இந்த படத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்து வருகிறார், ராமர் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். 

தனுஷ் நடிப்பில் வெளியாகி ஹிட்டான 'வடசென்னை' படத்தின் யுனிவர்ஸில் தான் இதன் கதை நடப்பது போல் வெற்றிமாறன் அமைத்திருக்கிறார். 

சிலம்பரசனும், வெற்றிமாறனும் இணையப் போகிறார்கள் என்று அறிவிப்பு வந்த நாளில் இருந்தே இப்படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவல் ஜாஸ்தியாக தான் இருக்கிறது. தற்போது, சிலம்பரசன் எக்ஸ் தளத்தில் "நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த 'அரசன்' படத்தின் மிகப் பெரிய ஷெட்யூல் இன்றுடன் முடிவடைகிறது" என்று பதிவிட்டதுடன், ஷூட்டிங் ஸ்பாட் வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.

 

 

From Around the web