×

ரிலிஸுக்கு முன் நிசப்தம் படத்தின் தலைப்பை அதிரடியாக மாற்றிய படக்குழு! ஏன் தெரியுமா?

அனுஷ்கா மற்றும் மாதவன் நடிப்பில் உருவாகியுள்ள நிசப்தம் படத்தின் பெயரை சைலன்ஸ் என மாற்றியுள்ளனர்.

 

அனுஷ்கா மற்றும் மாதவன் நடிப்பில் உருவாகியுள்ள நிசப்தம் படத்தின் பெயரை சைலன்ஸ் என மாற்றியுள்ளனர்.

மாதவன், அனுஷ்கா, அஞ்சலி நடித்துள்ள மௌன திரைப்படம் சைலன்ஸ். பல மொழிகளில் உருவாகியுள்ள இந்த படத்துக்கு தமிழில் 'நிசப்தம்' எனப் பெயர் வைக்கப்பட்டு இருந்தது. கொரோனா லாக்டவுன் காரணமாக  ஓடிடியில் வரும் அக்டோபர் இரண்டாம் தேதி வெளியாக உள்ளது நிசப்தம். இந்த படத்தின் டிரைலர் இன்னும் சில நாள்களில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் நிசப்தம் என்ற பெயரை மாற்றி இப்போது தமிழிலும் சைலன்ஸ் என்றே பெயரே வைக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் ஓடிடியில் வெளியாவதால், படத்தை தேடுவதில் சிக்கல் எழக் கூடாது என்பதற்காக ஒரே பெயரையே வைத்து அதிலேயே அனைத்து மொழிகளுக்கான ஆடியோ வசதியையும் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News