×

சில்க் சில்க் சில்க்- சில்க் ஸ்மிதா மண்ணை விட்டு பிரிந்த மர்மம்?

காந்த கண்ணழகி, கட்டுடல் நாயகி, கவர்ச்சி பெட்டகம்,  தென்னாட்டு மர்லின் மன்றோ சில்க் ஸ்மிதா மண்ணை விட்டு பிரிந்த மர்மம் என்ன? சில்க் என்றாலே ஒரு கிறக்கம் தான். தமிழ்சினிமா ரசிகர்களில் இவரைத் தெரியாதவர் யாருமே இருக்க முடியாது.
 

காந்த கண்ணழகி, கட்டுடல் நாயகி, கவர்ச்சி பெட்டகம்,  தென்னாட்டு மர்லின் மன்றோ சில்க் ஸ்மிதா மண்ணை விட்டு பிரிந்த மர்மம் என்ன? சில்க் என்றாலே ஒரு கிறக்கம் தான். தமிழ்சினிமா ரசிகர்களில் இவரைத் தெரியாதவர் யாருமே இருக்க முடியாது.

பிறப்பு


சில்க் ஸ்மிதா ஆந்திர மாநிலம் ஏலூரில் 1960 டிசம்பர் 2ல் பிறந்தார்.  இவரது இயற்பெயர் விஜய லட்சுமி. . குடும்ப வறுமை காரணமாக 4ஆம் வகுப்பிலேயே பள்ளிப்படிப்பை நிறுத்தினார். சிறுவயதிலேயே இவருக்கு பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். மாமியார் கொடுமை மற்றும் வறுமை காரணமாக சினிமா மூலம் சம்பாதிக்க நினைத்தார்.

சினிமா மோகம்

Silk smitha

சிறுவயது முதலே சினிமாவின் மீது தீராத மோகம் கொண்டிருந்தார். வறுமையைப் போக்க சினிமாவைத் தேர்ந்தெடுத்தார். அதற்காக சென்னை சென்றார். ஆரம்ப காலத்தில் அங்குள்ள உறவினர் வீடுகளில் தங்கி இருந்து சிறுசிறு வேலைகளைச் செய்தார். 

ஒப்பனைக் கலைஞராக வேலை செய்துகொண்டே சினிமா வாய்ப்பைத் தேடினார். அந்த சமயத்தில் வினுசக்கரவர்த்தி இவரது வசீகரிக்கும் கண்களை அடையாளம் கண்டு தனது வண்டிச்சக்கரம் என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். படத்தில் சாராயம் விற்கும் பெண்ணாக சிலுக்கு என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். படம் சுமாராகவே ஓடியது. இருந்தாலும் படத்தில் தனக்கு கொடுக்கப்பட்ட வேடத்தில் கச்சிதமாக நடித்திருப்பார். தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் வரத் தொடங்கின.

விணுசக்கரவர்த்தியின் மனைவி இவருக்கு ஆங்கிலம் கற்றுக் கொடுத்தார். வினுசக்கரவர்த்தியை தனது குருவாக ஏற்றுக்கொண்ட சில்க் தனது முதல் பட பாத்திரமான சில்க் உடன் ஸ்மிதாவை சேர்த்துக்கொண்டு சில்க் ஸ்மிதா என்ற பெயரிலேயே நடிக்க ஆரம்பித்தார்.

காந்தக் கண்களையும், கவர்ச்சி உதடுகனையும், வாளிப்பான உடல் அழகையும் கொண்டு சினிமாவில் வலம் வந்த இவரை இளைஞர்கள் கொண்டாடினர். 

ரஜினி, கமல், பிரபு, சத்யராஜ் என பல கதாநாயகர்களுடன் நடித்த இவரது படங்கள் சக்கை போடு போட்டன. சகலகலா வல்லவனில் கமலுடன் சேர்ந்து அசத்திய "நேத்து ராத்திரி  யம்மா" பாடலை யாராலும் மறக்க முடியாது.

கவர்ச்சி மட்டுமின்றி தன்னால் நடிக்கவும் முடியும் என்று நிரூபித்துக் காட்டினார். 

நீங்கள் கேட்டவை, அன்று பெய்த மழையில், அலைகள் ஓய்வதில்லை போன்ற படங்கள் இவர் நடிப்புக்கு உதாரணம். 

மூன்று முகம், சூரக்கோட்டை சிங்க குட்டி, தாலாட்டு கேட்குதம்மா படங்களில் முத்திரை பதித்த இவர் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத அங்கமானார். கணிசமாக சம்பளம் வாங்கிய இவரைத் தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும் போட்டி போட்டு புக் செய்தனர். 

இணையைத் தேடி என்ற மலையாள படத்தில் அறிமுகம் ஆனார்.  லயனம் என்ற படத்தில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து அப்படம் தமிழ், தெலுங்கு , இந்தி என பல மொழிகளில் வெளியாகி வெற்றி பெற்றது.

வெறுமை

Silk smitha

சினிமாவில் இவர் பிரபலமானாலும் இவரை வெறுமை வாட்டியது. தன்னிடம் யாரும் உண்மையான அன்பை காட்டுவதில்லை என்றும் ஆண்கள் எல்லோரும் தன்னை போகப்பொருளாகவே பார்க்கின்றனர் என்றும் கவலைப்பட்டார்.

1996 செப்டம்பர் 23 ல் இவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அவர் உறவினர்கள் இது தற்கொலை அல்ல. சொத்துக்காக கொலை செய்யப்பட்டு இருக்கிறார் என குற்றம் சாட்டினர். அவர் சாகும் தருவாயில் எழுதிய கடிதத்தில் உள்ள கையெழுத்து அவருடையதல்ல என்று மறறுத்துள்ளார் அவரது தம்பி நாகர்பிரசாத். ஆனால் கடைசியில் சில்க் உடன் தாடிக்காரர் ஒருவர் இருந்ததாகவும், காதலருக்காக படம் தயாரித்து நஷ்டம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் காவல்துறையினர் இவர் தற்கொலை செய்துள்ளதாக முடித்து வைத்தாலும் இன்னும் வரை அந்த சாவின் மர்மம் நீடித்தே வருகிறது.  

இவரது வாழ்க்கை வரலாறை மையமாகக் கொண்டு தி டர்ட்டி பிக்சர் என்ற இந்தி படம் 2011 ல் வெளியானது. இதில் சில்க் வேடத்தில் வித்யாபாலன் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-சங்கரன் -முக்காணி

From around the web

Trending Videos

Tamilnadu News