Connect with us
silk

Cinema News

மன்சூர் அலிகானுக்காக சிலுக்கு செஞ்ச அந்த விஷயம்!.. மனுசன் எப்பவுமே அத மறக்கவே மாட்டாராம்!.

Silk Smitha: தமிழ் சினிமாவில் சில்கிற்கு இருந்த அந்த ஒரு கிரேஸை இதுவரைக்கும் எந்த நடிகையாலும் முறியடிக்க முடியவில்லை. ஏன் எந்த ஒரு ஹீரோயினாலும் முடியவில்லை. என்ன மேஜிக் செய்தாரோ? சில்கிற்கு என ஒரு தனி அடையாளமே இருக்கின்றது.

கவர்ச்சி நடிகை என்பதையும் தாண்டி ஒரு சிறந்த குணம் படைத்தவராகவே சினிமாவில் வலம் வந்திருக்கிறார். தன் வீட்டில் வேலை பார்க்கும் பணியாட்களுக்கு எது வேண்டுமோ அள்ளி அள்ளி கொடுத்து அழகு பார்ப்பாராம் சில்க் ஸ்மிதா.

இதையும் படிங்க: முதல் சீன்லயே சிவாஜி என்ன கண்டுபிடிச்சிட்டார்!.. பல வருடங்களுக்கு பின் பார்த்திபன் சொன்ன சீக்ரெட்…

ரஜினி, கமல் ஏன் விஜய் வரைக்குமே அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களிலும் சில்க் ஆடாத நடனமே இல்லை என்று சொல்லலாம். வினியோகஸ்தரர்களும் அந்தக் காலங்களில் படம் வாங்கும் போது கூட படத்தில் சில்க் ஆட்டம் இருக்குமா என்று கேட்டுதான் வாங்குவார்களாம்.

அந்தளவுக்கு ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் கவர்ந்த நடிகையாகவே இருந்து வந்திருக்கிறார் சில்க் ஸ்மிதா. இந்த நிலையில் சில்கிற்கும் மன்சூர் அலிகானுக்கும் இடையே உள்ள உறவை பற்றி ஒரு செய்தி இணையத்தில் வைரலானது.

இதையும் படிங்க: காசு மேலே காசு வந்தா யாருக்குத்தான் ஆசை வராது!.. எஸ்.ஜே.சூர்யாவின் மனதை மாற்றிய மார்க் ஆண்டனி!..

மன்சூர் அலிகான் தயாரித்த ஒரு படத்தில் சில்க் நடனம் ஆடினாராம். அதிலிருந்தே இருவருமே அக்கா – தம்பி போலவே பழகி வந்திருக்கிறார்கள். சில்க் மீது மன்சூர் அலிகானுக்கு தனிப் பிரியமே இருந்ததாம்.

தன் பாசத்தை காட்டுவதற்காகவே சில்க் தன்னிடம் இருந்த ஒரு விலையுயர்ந்த காரை மன்சூர் அலிகானுக்கு அன்பளிப்பாக கொடுத்தாராம். அந்தக் காரை மன்சூர் அலிகான் இப்போது வரைக்கும் வைத்திருக்கிறாராம்.

இதையும் படிங்க: அது ஸ்லிம் பாடி! இது வெயிட் பாடி! ‘தளபதி 68’ல் விழிபிதுங்கி நிற்கும் படக்குழு – கொஞ்சம் குறைங்க பாஸ்

மன்சூர் அலிகானும் சில்க்கும் அதிரடிப்படை, தெய்வக்குழந்தை போன்ற பல படங்களில் இணைந்து நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Continue Reading

More in Cinema News

To Top