Categories: Cinema News latest news throwback stories

சில்க் ஸ்மிதாவின் காதலர் யார் தெரியுமா? கோலிவுட்டின் சீக்ரெட் தகவல்…

நடிகை சில்க் ஸ்மிதாவின் காதலர் யார் என்ற சுவாரஸ்ய தகவலுக்கு விடை கிடைத்திருக்கிறது.

1980களின் காலகட்டத்தில் தென்னிந்திய சினிமா ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த சில்க் ஸ்மிதா, அன்றைய இளைஞர்களின் கவர்ச்சி கன்னியாக வலம் வந்தார். சில்க்கினை பார்த்தாலே போது என்ற நிலையில் அவர் வீட்டின் முன் ரசிகர்கள் தவம் கூட இருந்து இருக்கிறார்கள்.

Smitha- prabhakaran

இப்படி பலரை அலைய வைத்த சில்க் ஸ்மிதா படுபிசியாக இருந்த காலத்தில், ஒரு நபரை காதலித்து வந்ததாகவும், அந்த நபரையே திருமணம் செய்ய முடிவெடுத்திருந்ததாகவும் பல செய்திகள் வலம் வந்தன. எனினும் 1996 ஆம் ஆண்டு யாரும் எதிர்பாராவிதமாக தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் சில்க் ஸ்மிதா. இந்த செய்தி திரையுலகத்தினரை திடுக்கிட வைத்தது.

அந்த காதலர் வேறு யாருமில்லை வேலு பிரபாகரன் தான். பல படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த வேலு பிரபாகரன் சில்க் ஸ்மிதாவின் பிக்பாக்கெட் படத்தில் கேமராமேனாக பணியாற்றினார். 1990 ஆம் ஆண்டு நிழல்கள் ரவி நடிப்பில் வெளியான அதிசய மனிதன் படத்தினை முதன்முதலில் இயக்கினார்.

velu prabhakaran

இப்படி ஒரு பக்கம் உயர்ந்த வந்த வேலு பிரபாகரன் உடையில் அதிக கவனம் செலுத்துவாராம். அன்றைய காலகட்டத்தில் அவ்வளவு அழகாக தன்னை காட்டி கொள்வாராம். இதனால் சில்க் ஸ்மிதாவிற்கு அவர் மீது காதல் இருந்ததாம். அதை தன்னால் மறக்க முடியாது என சமீபத்திய ஒரு பேட்டியில் வேலு பிரபாகரன் கூறினார்.

ஆனால் சில்கின் அந்த காதலர் இவர் தானா என்பது அறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 60 வயதான வேலு பிரபாகரன் சமீபத்தில் தன் படத்தில் நடித்த 30 வயது நடிகை செர்லி தாசை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
Shamily