Connect with us
silk smitha

Cinema News

சில்க் ஸ்மிதாவுக்கும் ஒரு 12பி கதை இருக்கு!….அது மட்டும் நடந்திருந்தா?….

தமிழ் சினிமாவில் 80களில் கவர்ச்சி கன்னியாக வலம் வந்தவர் சில்க் ஸ்மிதா. கவர்ச்சி பாடலுக்கு நடனமாடுவது மட்டுமில்லாமல் சில படங்களில் பிரபுவுக்கு ஜோடியாகவும், இளம் காதலர்களை சேர்த்து வைக்கும் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். ஏராளமான ரஜினி மற்றும் கமல் படங்களில் கிளுகிளுப்பான பாடல்களுக்கு நடனமாடி ரசிகர்களை கிறங்கடித்தவர். தமிழ் மற்றுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழி திரைப்படங்களிலும் இதேபோல் நடனமாடியுள்ளார்.

ஆனால், உண்மையில் அவர் சினிமாவில் நடிக்க வந்தது கதாநாயகியாகத்தான். ஆனால், காலம் அவரை கவர்ச்சிகன்னியாக மாற்றியது.

silk smitha

75 காலகட்டத்தில் மலையாளத்தில் சூப்பர்ஸ்டராக வலம் வந்த ஜெயன் ஹீரோவாக நடிக்கும் பஞ்ச பாண்டவர் என்கிற கதையை படம் எடுக்க நினைத்தனர். அதில் ஜெயனோடு சேர்த்து 5 ஹீரோக்கள். வேலை தேடி மும்பை செல்வது போலவும், அங்கு அவர்களுக்கு உதவு ஒரு நர்ஸ் பெண்ணை அந்த 5 பேரும் காதலிப்பது போலவும் கதை அமைக்கப்பட்டிருந்தது.

silk

 

இந்த படத்திற்கு ஒரு புதுமுகநாயகியை அறிமுகம் செய்வோம் என் முடிவெடுத்த போது ஆந்திராவில் இருந்து வந்து மேக்கப் டெஸ்டில் கலந்து கொண்டவர் விஜயமாலா (சில்க் ஸ்மிதா). அவரே கதாநாயகி என முடிவெடுத்துவிட்டனர்.. ஆனால், அந்த படத்தின் படப்பிடிப்பு துவங்க தாமதம் ஆனதால் ‘இணையை தேடி’ என்கிற கிளுகிளுப்பு படத்தில் நடிக்க சென்றுவிட்டார் விஜயமாலா.

 

எனவே, உமா மகேஸ்வரி என்கிற பெண்ணை நடிக்க வைத்து பஞ்சபாண்டவர் கதையை இயக்கி முடித்தனர். ஆனால், தயாரிப்பாளருக்கும், வினியோகஸ்தருக்கும் இடையேயான சில பிரச்சனைகளால் அந்த படம் வெளிவரவில்லை.

silk

ஒருவேளை அந்த படத்தில் சில்க் ஸ்மிதா நடித்திருந்தால் அவர் கவர்ச்சி நடிகையாக மாறியிருக்க மாட்டார். இணையை தேடி படத்தில் நடித்ததால் கடைசி வரைக்கும் கவர்ச்சி கன்னியாகவே பார்க்கப்பட்டார்.

அந்த பக்கம் போயிருந்தா கதாநாயகி…. இந்த பக்கம் சென்றதால் கவர்ச்சி கன்னி…

ஆனாலும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார் சில்க் ஸ்மிதா….

 

தகவல் : முகநூலில் இருந்து செல்வன் அன்பு….

author avatar
சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top