Categories: Cinema News latest news

மாநாடு படத்தின் மாஸ் டயலாக் பேசும் சிம்பு – டப்பிங் வீடியோவுக்கு தருமாறு ரெஸ்பான்ஸ்!

வெங்கட் பிரபு எழுதி இயக்கியுள்ள அதிரடி அரசியல் திரைப்படமாக மாநாடு உருவாகிறது. இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். படத்தில் சிம்புக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். மேலும் எஸ். ஜே. சூர்யா வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

அண்மையில் வெளியான இப்படத்தின் ட்ரைலர் அதிரடி காட்சிகளுடன் மிரட்டலாக இருந்தது. எனவே படத்தின் மீதான ரசிகர்களின் பார்வை அதிகரித்துவிட்டது. இதில் எஸ். ஏ. சந்திரசேகர் முதலமைச்சர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

அப்துல் காலிக் எனும் கதாபாத்திரத்தில் சிம்பு நடிக்கும் இப்படத்தின் டப்பிங் வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராமில் அவரே வெளியிட்டுள்ளார். அதில் ட்ரைலருக்கான டப்பிங் பேசியுள்ளார் குறிப்பாக எஸ். ஜே. சூர்யாவின் அந்த மாஸ் டயலாக் ஆன வந்தான் சுட்டான் செத்தான் ரிப்பீட் என பேசி லைக்ஸ் அள்ளியுள்ளார். சிம்புவின் ரசிகர்ளுக்கு இந்த வீடியோ விருந்து வைத்தார் போன்று உள்ளது.

https://www.instagram.com/p/CUr9jl1lcbv/

பிரஜன்
Published by
பிரஜன்