×

சிம்புவுடன் சேர்ந்து தப்பு பண்ணிட்டேன்... யுவன் ஷங்கர் ராஜா..

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பிரபல இளம் நடிகராக திகழும் காளிதாஸ் ஜெயராம் மற்றும் நடிகை மேகா ஆகாஷ் இணைந்து நடிக்கும் இப்பாடலுக்கு சாண்டி மாஸ்டர் நடன இயக்குனராக பணியாற்ற உள்ளார். இதற்கு முன் காளிதாஸ் ஜெயராமும், மேகா ஆகாஷ் இருவரும் ஒரு பக்க கதை திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

246f1b1e-d175-4ef4-964d-17235a80cf3f

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் 'மாநாடு' திரைப்படத்தில் நடித்துள்ளார் சிம்பு. கடந்த பொங்கலுக்கு வெளியான ஈஸ்வரன் திரைப்படத்திற்கு பிறகு நீண்ட காலமாக இந்த திரைப்படத்திற்காக காத்திருக்கின்றனர் ரசிகர்கள். 

அண்மையில் இந்த படத்திலிருந்து வெளியான பர்ஸ்ட் சிங்கிள் பாடலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் சிம்புவும் யுவனும் இணையவுள்ள புதிய ஆல்பம் பாடலுக்கான டைட்டில் வெளியாகியுள்ளது.

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் U1 ரெக்கார்ட்ஸ் தயாரிப்பில் உருவாகும் புதிய ஆல்பம் பாடலை நடிகர் சிம்பு பாடுகிறார். அறிமுக இசையமைப்பாளர் A.K.ப்ரியன் இசையமைக்கும் இந்த புதிய பாடலை விக்னேஷ் ராமகிருஷ்ணா எழுதியுள்ளார். இந்த பாடலை தான் நடிகர் சிம்பு பாடவுள்ளார்.

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பிரபல இளம் நடிகராக திகழும் காளிதாஸ் ஜெயராம் மற்றும் நடிகை மேகா ஆகாஷ் இணைந்து நடிக்கும் இப்பாடலுக்கு சாண்டி மாஸ்டர் நடன இயக்குனராக பணியாற்ற உள்ளார். இதற்கு முன் காளிதாஸ் ஜெயராமும், மேகா ஆகாஷ் இருவரும் ஒரு பக்க கதை திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் டாங்லி ஜம்போ இயக்கும் இப்பாடலுக்கு மேயாத மான் திரைப்படத்தின் ஒளிப்பதிவாளரான விது அய்யனா ஒளிப்பதிவு செய்கிறார். இந்நிலையில் இந்த பாடலுக்கு தப்பு பண்ணிட்டேன் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் இந்த பாடலை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

அண்மையில் மாநாடு திரைப்படத்தில் இருந்து 'மெர்ஸைலா' என்கிற ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் பாடலை யுவனும், அவரது சகோதரி பவதாரணியும் இணைந்து பாடியுள்ளனர். இந்த படத்தின் இசை வெளியீட்டு உரிமையை யுவனின் யு1 ரெக்கார்ட்ஸ் ஆடியோ உரிமையைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News