×

சிம்பு - த்ரிஷாவிற்கு திருமணமா...? கோலிவுட் ஹாட் டாப்பிக் இது தான்!

திரைப்படங்களில் ரொமான்டிக் காதல் ஜோடியாக வலம் வந்த ஜெசி - கார்த்திக் நிஜ வாழ்க்கையில் ஜோடியாக போவதாக செம ஷாக்கிங் தகவல் ஒன்று வெளியாகி இணையத்தில் தீயாக பரவி வருகிறது. நடிகர் சிம்பு இதற்கு முன்னர் நயன்தாரா மற்றும் ஹன்சிகா ஆகியோர்களுடன் காதல் வயப்பட்டு பின்னர் பிரேக் அப் செய்துவிட்டார்.

 

இதையடுத்து கடந்த சில வருடங்களாகவே சிம்புவின் திருமணம் குறித்த செய்திளையும் புது புது மணப்பெண்களும் லிஸ்டில் வந்து போவதெல்லாம் வழக்கமான ஒன்றாக ஆகிவிட்டது. மாதத்திற்கு ஒரு திருமண செய்தி வந்துவிடுகிறது.

அந்தவகையில் தற்ப்போது நெருங்கிய தோழியும் நடிகையுமான த்ரிஷாவை சிம்பு திருமணம் செய்ய போவதாக தகவல் ஒன்று வெளியாகி இணையத்தில் தீயாக பரவி வருகிறது. ப்லீம் பேர் நிறுவனத்திடம் இருந்து வெளியாகியுள்ள இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியாததால் நெருங்கிய வட்டாரங்கள் இது முற்றியிலும் வதந்தியாக இருக்கக்கூடும் என யூகித்துள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News