×

அம்மாவின் வாக்குறுதியை காப்பாற்ற சமத்து பிள்ளையாக மாறிய சிம்பு! இதெல்லாம் நம்புறமாதிரியா இருக்கு...

சிம்பு என்றால் வம்பு, படப்பிடிப்புக்கு நேரத்திற்கு வர மாட்டார். தயாரிப்பாளர், இயக்குநரை கதறவிடுவார் என்று ஒரு கூட்டம் சொல்லிக் கொண்டிருக்கிறது. 
 

முன்னதாக மாநாடு படத்தில் பிரச்சனை ஏற்பட்டு பின்னர் சமரச பேச்சுவார்த்தை நடந்தபோது அதில் சிம்பு சார்பில் அவரின் அம்மா உஷா கலந்து கொண்டார். என் மகன் சரியான நேரத்திற்கு வந்து ஒப்புக் கொண்ட நாட்களில் நடித்துக் கொடுப்பார் என்று வாக்குறுதி அளித்தார். 

தன் மீது இருக்கும் நம்பிக்கையில் அம்மா கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற சிம்பு சரியான நேரத்திற்கு படப்பிடிப்புக்கு வருகிறாராம். மாநாடு படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்கிற இஸ்லாமியராக நடிக்கிறார். படத்திற்காக சிம்பு தனது உடல் எடையை வெகுவாக குறைத்தது தான் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News