×

மருமகனுடன் பிறந்தநாள் கொண்டாடிய சிம்பு - தங்கை வெளியிட்ட புகைப்படம்!

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பிறகு அடைமொழியோடு வலம் வரும் நடிகர் சிம்பு சிறுவயதில் லிட்டில் சூப்பர் ஸ்டார் அதன் பிறகு நாளடைவில் அதுவே யங் சூப்பர் ஸ்டார் ஆனது சிலவருடங்களாகவே படவாய்ப்பின்றி இருந்த சிம்பு தற்ப்போது மாநாடு  படத்தில் நடித்து வருகிறார்.

 

கொரோனா ஊரடங்கு என்பதால் படிப்பிப்புகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் சிம்பு குடுபத்தினருடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். சமீபத்தில் கூட சமையல் செய்த வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலானது. சிம்புவிற்கு இலக்கியா என்ற தங்களையும் , குறளரசன் என்ற தம்பியும் இருக்கின்றனர். இவ்ர்கள் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. குடும்பத்தில் மூத்த பிள்ளையான சிம்பு இன்னும் முரட்டு சிங்கிளாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் சிம்புவின் தங்கை  இலக்கியா தனது மகன் ஜேசனின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். அதில் சிம்பு தனது குட்டி மருமகனுடன் கேக் வெட்டிய அந்த அழகிய புகைப்படத்தை வெளியிட்டு மாமாவுடன் ஜேசன் என பதிவிட்டுள்ளார். இந்த Throwback புகைப்படம் இணையத்தில் சூப்பர் வைரலாகி வருகிறது .

From around the web

Trending Videos

Tamilnadu News