Categories: Cinema News latest news

நடிப்பை விடுத்து அடுத்த தொழிலுக்கு தாவிய சிம்பு.! இது எத்தனை நாள்னு தெரியாலேயே.!?

சிலம்பரசன் தற்போது தனது சினிமாவில் அடுத்த அத்தியாயத்தை வெற்றிகரமாக தொடங்கியுள்ளார். அது மேலும், வெற்றிகளை குவிக்க வேண்டும் என கவனமாக அடுத்தடுத்த நகர்வுகளை நகர்த்தி வருகிறார். அடுத்ததாக வெந்து தணிந்தது காடு, பத்து தல ஆகிய படங்கள் தயாராகி வருகிறது

சிம்புவின் அப்பா, டி.ராஜேந்திரன் சிம்புவின் பெயரிலேயே சிம்பு சினி ஆர்ட்ஸ் எனும் பட நிறுவனம் நடத்தி வந்தார். அவர் நடித்த படங்கள், சிம்பு நடித்த ஆரம்பகால சில திரைப்படங்கள் என அனைத்தையும் அந்த நிறுவனமே தயாரித்து வந்தது.

அதன் பிறகு சிம்புவும் ஒழுங்காக தொடர்ச்சியாக நடிக்காத காரணத்தால், அடுத்ததடுத்து படங்கள் தயாரிப்பில் இருந்து ஒதுங்கி இருந்தது. தற்போது சிம்பு ரீ என்ட்ரி கொடுத்தது போல சிம்பு சினி ஆர்ட்ஸ் கம்பெனியும் மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது.

இதையும் படியுங்களேன் – பழச மறக்காம லிங்குசாமிக்கு கை கொடுக்கும் சிம்பு…இப்ப ரொம்பவே மாறிட்டார்யா!…..

சிம்பு சினி ஆர்ட்ஸ் விநியோகஸ்தராக களமிறங்க உள்ளது. எஸ்.ஜே.சூர்யா நாயகனாக நடித்துள்ள கடமையை செய் எனும் திரைப்படத்தை அந்நிறுவனம் வாங்கி உலகம் முழுவதும் வெளியிட உள்ளது. இப்படத்தை வெங்கட் ராகவன் எனும் இயக்குனர் இயக்கி உள்ளார். யாஷிகாஆனந்த் ஹீரோயினாக நடித்து உள்ளார். மே மாதம் இப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. இன்னும் தேதி முடிவு செய்யப்படவில்லை.

Manikandan
Published by
Manikandan