×

சிம்புவையே மாற்றிய அந்த நடிகர்... ராம் படத்தில் நடிக்க அதுதான் காரணமாம்!...

 

கொரோனா இடைவெளியில் தனது உடல் எடையை பாதியாக குறைத்த சிம்பு, சுசீந்திரன் இயக்கத்தில் குறுகிய நாளில் ஈஸ்வரன் படத்தில் நடித்து முடித்துவிட்டார். அதோடு, அதே வேகத்தில் மாநாடு பட படப்பிடிப்பிலும் கலந்து கொண்டு நடித்து வருகிறார். சிம்பு இதே வேகத்தில் நடித்தால் மாநாடு படம் விரைவில் முடிவடைவதோடு, வருடத்தில் 6 படத்தில் சிம்பு நடித்தாலும் ஆச்சர்யபடுவதிற்கில்லை என சினிமா திரையுலகம் கூறுகிறது.

இந்நிலையில், கற்றது தமிழ், தங்க மீன்கள்,தரமணி ஆகிய படங்களை இயக்கிய ராமின் இயக்கத்தில் சிம்பு நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். ராம் சீரியஸான படங்களை இயக்குபவர். ஆனால், சிம்புவோ கமர்ஷியல் மசாலா படங்களில் நடிப்பவர். எனவே, ராம் இயக்கத்தில் அவர் நடிக்க ஒத்துக்கொண்டிருப்பது திரையுலகில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அதற்கான காரணமும் வெளியே கசிந்துள்ளது.

ram

நடிகர் விஜய் சேதுபதி போல ஒரு பக்கம் கமர்ஷியல் மசாலா படங்களிலும், ஒரு பக்கம் சீரியஸான கதையம்சம் கொண்ட வித்தியாசமான படங்களில் நடித்து பட்டையை கிளப்பி வரும் விஜய் சேதுபதி போல நாமும் நடிக்க வேண்டும் என சிம்பு கருதியதின் விளைவே அவர் ராமின் இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News