தனுஷ் கட்டிய கோட்டையை சுக்குநூறாக உடைத்த சிம்பு!.. விஜய்யோட தம்பி வெயிட் காட்டுறாரே!
நடிகர் சிம்பு அரசியல் சார்ந்த விஷயங்கள் குறித்து அவ்வப்போது தனது கருத்துகளை தெரிவித்து வந்தாலும், அரசியல் கட்சி தொடங்குவது அல்லது நேரடி அரசியல் பயணத்தை தொடங்குவது தொடர்பாக அவர் எந்த அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை.
இந்நிலையில், சமீபத்தில் அவர் கலந்துக்கொண்ட சவுக்கு சங்கர் ஸ்டூடியோ திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக வந்த சிம்புவிடம் அரசியல் தொடர்பான கேள்விகள் கேட்ட போது அதற்கு பதிலளித்த அவர், தற்போதைய சூழலில் அரசியலில் ஈடுபடுவதற்கு தனக்கு விருப்பம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

தனது தந்தை டி.ராஜேந்தர் அரசியல் கட்சி தொடங்கி செயல்பட்ட காலகட்டத்தை அருகில் இருந்து பார்த்ததாக கூறிய சிம்பு, அந்த பயணத்தில் அவர் எதிர்கொண்ட பல்வேறு சவால்களையும் சிரமங்களையும் நேரடியாக பார்த்ததாக தெரிவித்துள்ளார். மேலும், இப்போதைக்கு எங்க அண்ணன் விஜய் நன்றாக தான் ஆட்சி செய்துக்கொண்டுள்ளார் அவரே இருக்கட்டும் பிறகு பார்க்கலாம் எனக் கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து, எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவதற்கான வாய்ப்பு இருக்கிறதா என்று சிம்புவிடம் கேட்கப்பட்டது. அதற்கு, காலம் தான் பதில் சொல்லும் என பதிலளித்துள்ளார்.
அதே நேரத்தில், எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை இப்போதே உறுதியாக கூற முடியாது என்றும் சிம்பு தெரிவித்துள்ளார். இதனால், அரசியல் தொடர்பான தனது தற்போதைய நிலைப்பாட்டை சிம்பு வெளிப்படையாக கூறியிருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.