×

சிம்பு படத்தின் தயாரிப்பாளர் மாற்றம் – அதிர்ச்சியில் மாநாடு தயாரிப்பாளர்!

சுசீந்தரன் இயக்கத்தில் சிம்பு நடிக்க இருந்த படத்தின் தயாரிப்பாளராக இப்போது வேறு ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

சுசீந்தரன் இயக்கத்தில் சிம்பு நடிக்க இருந்த படத்தின் தயாரிப்பாளராக இப்போது வேறு ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

நடிகர் சிம்பு நடிக்கும் மாநாடு படத்துக்கு முன்னதாகவே சுசீந்தரன் இயக்கும் படத்தில் நடிக்க முடிவெடுத்தார். இது மாநாடு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கு அதிருப்தியை ஏற்படுத்த அவர் கவுன்சிலில் முறையிட்டார். ஆனால் சிம்புவோ இது எனது சொந்த படமாக நானே தயாரிக்க போகிறேன் எனக் கூறினார். அதனால் சுரேஷ் காமாட்சியும் அனுமதி அளித்தார்.

ஆனால் இப்போது சிம்பு படத்தை தயாரிக்கவில்லை என சொல்லபடுகிறது. வேறொரு தயாரிப்பாளர் தயாரிக்க சிம்புவுக்கு 10 கோடி சம்பளமும் லாபத்தில் பங்கும் தரப்படும் என சொல்லப்படுகிறது. இந்த செய்தி மாநாடு தயாரிப்பாளருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News