Categories: Cinema News latest news

எவ்ளோ நாள் ஆச்சு? சிம்புவை அப்படி பார்த்து – தேசிங்கு பெரியசாமி வைத்த ட்விஸ்ட்! செட் ஆகுமா?

எப்படியோ ஒரு வழியாக சிம்பு ஐசரி கணேஷ் இப்போதைக்கு ஓரங்கட்டுபட்டிருக்கின்றது. இரண்டு தினங்களுக்கு முன்பு ஐசரி கணேஷ் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் சிம்புவுடனான பிரச்சினையை பற்றி பேசியிருந்தார். அதாவது என் கம்பெனியும் கமல் கம்பெனியும் வேறு வேறு இல்லை. இரண்டும் ஒன்று தான். ஆகவே நாங்கள் பேசித்தீர்த்துக் கொள்கிறோம் என்றும்,

இது அண்ணன் தம்பிக்கு இடையே ஏற்படும் பிரச்சினை போலதான் என்றும் அதை சுமூகமாக முடித்து விடுகிறோம் என்றும் கூறியிருந்தார். மேலும் ஐசரி கணேஷ் ஒரு நல்ல இயக்குனரை பார்த்து அதன் பிறகே சிம்புவை நடிக்க வைப்பார் என்று தெரிகிறது.

simbu1

இதையும் படிங்க : கடன் வாங்கியதால் ஜப்திக்கு போன வீடு!.. எம்.ஜி.ஆர் சந்தித்த சோதனை!.. எல்லாமே அந்த படத்துக்காக!…

இதற்கிடையில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் கமல் புரடக்‌ஷனில் சிம்பு நடிப்பதற்கு ஆயத்தமாகி வருகிறார். இந்தப் படத்தில் சிம்புவுக்கு இரட்டை கதாபாத்திரமாம். அதுவும் வில்லனாகவும் ஹீரோவாகவும் சிம்புவே நடிக்கிறாராம். ஏற்கெனவே மன்மதன் படத்திலும் அப்படி ஒரு கதாபாத்திரத்தில் தான் சிம்பு நடித்திருப்பார்.

அந்தப் படம் சிகப்பு ரோஜாக்கள் படத்தை தழுவி எடுக்கப்பட்டதாக இருந்திருக்கும்.  மக்கள் மத்தியிலும் அந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்றதாகவே இருந்திருக்கும். அதனால் நீண்ட வருடத்திற்கு பிறகு  மீண்டும் வில்லனாக மிரட்ட வர காத்துக் கொண்டிருக்கும் சிம்புவை எதிர்பார்த்து ரசிகர்களும் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

simbu2

இதையும் படிங்க : கமலாம்பாளுக்கு முன்னாடியே சிவாஜி என் மீது ஆசைப்பட்டார் – நடிகை பகீர் வாக்குமூலம்

மற்றப்படி படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள், நடிகைகள் குறித்து எந்த ஒரு அப்டேட்டும் இதுவரை வெளிவரவில்லை. ஆனால் எடுத்த பேரை காப்பாற்றினால் சரி என்று கோடம்பாக்கத்தில் சிம்புவுக்காக அறிவுரை கூறி வருகிறார்கள்.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini