பொதுவாக ஒரு நடிகர் ஒரு படத்தில் நடித்து அப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்து நல்ல வசூலை ஈட்டிவிட்டால் அப்படத்தில் நடித்த ஹீரோ உடனே தனது சம்பளத்தில் சில கோடிகளை ஏற்றிவிடுவார். இது சினிமா துறையில் வழக்கமான ஒன்றுதான்.
தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்து வந்த சிவகார்த்திகேயன் டாக்டர் படம் ஹிட்டுகு பின் தனது சம்பளத்தை ரூ.35 கோடியாக மாற்றி விட்டார். இது எல்லா நடிகர்களுக்கும் பொருந்தும்.
இந்நிலையில், மாநாடு படம் வெற்றி பெற்றுள்ளதால் சிம்புவின் சினிமா கிராப் மேலே ஏறியுள்ளது. மாநாடு படம் ரூ.100 கோடி வசூலை நெருங்கியதாக செய்திகள் வெளியானது. எனவே, சிம்பு தனது சம்பளத்தை ரூ.25 கோடியாக மாற்றிவிட்டாராம். இது அவரை வைத்து படம் எடுக்க நினைக்கும் தயாரிப்பாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதற்கு காரணம் இருக்கிறது. சிவகார்த்திகேயன் ரூ.25 கோடி சம்பளம் வாங்கி வந்தார். டாக்டர் படத்தின் வெற்றியால் ரூ.35 கோடி உயர்த்தினார். ஆனாலும் ரூ.30 கோடி வரை அவர் இறங்கி வருகிறார். ஆனால், மாநாடு படத்திற்கு சிம்பு பெற்ற சம்பளம் ரூ.6 கோடி மட்டுமே. எனவே, 10 அல்லது 15 கோடி வரை சம்பளம் உயர்த்தினால் பரவாயில்லை. ரூ.25 கோடி என்பது மிகவும் அதிகம் என தயாரிப்பாளர்கள் முணுமுணுக்க துவங்கியுள்ளனர்.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…