×

தனுஷ் மட்டும்தானா?.. இந்தா நானும் வரேன்.. சிம்பு போடும் மாஸ்டர் ப்ளான்....

 
simbu

சமீபகாலமாக டிவிட்டரில் ஸ்பேஸ் எனும் அம்சம் பிரபலமாகி வருகிறது. அதில், பலரும் இணைந்து தங்களின் கருத்துக்களை வாய் வழியாகவே பேசி தெரிவிக்கலாம். சமீபத்தில் கூட ஜகமே தந்திரம் படத்தின் விளம்பரத்திற்காக நடிகர் தனுஷ் இதில் கலந்து கொண்டார்.

அப்போது, 17 ஆயிரம் பேர் அதில் பங்கேற்றது பெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது. அப்போது, பல ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு தனுசும் பதில் கூறியிருந்தார். இதையடுத்து, இந்த வசதி தற்போது மேலும் பிரபலமடைந்துள்ளது.

jagame

இந்நிலையில், நடிகர் சிம்பும் டிவிட்டர் ஸ்பேஸில் வரவுள்ளார். அவர் நடித்து முடித்துள்ள மாநாடு படத்தின் விளம்பரத்திற்காக இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில், சிம்பு, வெங்கட்பிரபு, சுரேஷ் காமாட்சி, கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர். ஜூன் 21ம் தேதி மாநாடு படத்தில் முதல் பாடல் வெளியாகவுள்ளது. எனவே, அன்று இந்த நிகழ்வு நடைபெறும் எனத் தெரிகிறது.

தனுஷ் ரசிகர்கள் 17 ஆயிரம் பேர் கூடிவிட்டதால், பதிலுக்கு சிம்பு ரசிகர்கள் எத்தனை பேர் கூடுவார்கள் என்பது தெரியவில்லை.

From around the web

Trending Videos

Tamilnadu News