Connect with us

Cinema News

கோலிவுட்ல ஒரு கேம் ஆஃப் த்ரோன்ஸா?.. விஷுவல்ஸ் மிரட்டுதே!.. சிம்பு புது வீடியோ பார்த்தீங்களா? ..

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கி ஹிட் கொடுத்த அறிமுக இயக்குநர் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் எஸ்டிஆர் 48 படத்தின் மிரட்டலான க்ளிம்ப்ஸ் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

கமல்ஹாசன் தயாரிப்பில் ஒரு பக்கம் சிவகார்த்திகேயன் அமரன் படத்தில் நடித்துள்ள நிலையில், இன்னொரு பக்கம் சிம்பு ராஜ்கமல் தயாரிப்பில் எஸ்டிஆர் 48 படத்தில் நடித்து வருகிறார்.

இதையும் படிங்க: விஜய்க்கு இருக்கிற தைரியம் எனக்கு இல்ல.. இவ்வளவு ஃபிராங்கா சொல்லிட்டாரே பிரசாந்த்!

இந்நிலையில், தற்போது சிம்பு ஒரு சின்ன க்ளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளார். சிம்புவின் எஸ்டிஆர் 48 படத்தின் லுக் தான் இது என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ஆனால், ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் எஸ்டிஆர் 48 படத்தின் விஷுவல்ஸ் என்றால், தயாரிப்பு நிறுவனம் இந்த வீடியோவை வெளியிட்டு இருக்கும். மேலும், சிம்பு எஸ்டிஆர் 48 ஹாஷ்டேக்கை பயன்படுத்தி இருப்பார். இவை இரண்டுமே நடக்காத நிலையில், ஏதாவது ஒரு விளம்பரத்துக்கான வீடியோவாக இது இருக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறுகின்றனர்.

இதையும் படிங்க: எனக்கு சம்பளமே வேணாம்!.. விஜய் பட இயக்குனரை தட்டி தூக்கிய எஸ்.கே!.. காம்பினேஷனே அள்ளுது!..

கேம் ஆஃப் த்ரோன்ஸ் வெப்சீரிஸில் வருவது போன்ற விஷுவல்ஸ் உடன் வெளிநாட்டு நடிகர்களின் காட்சிகள் இடம்பெற்றுள்ள இந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் ஃபயர் விட்டு வருகின்றனர். ஆனால், இது ஏதாவது டிவி ஷோவுக்கான வீடியோவா? அல்லது விளம்பரமா? என பல கேள்விகள் எழுந்துள்ளன. எஸ்டிஆர் 48 அப்டேட் இல்லை என்றும் ரசிகர்கள் உறுதியாக நம்பி வருகின்றனர்.

 

 

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top