×

சிம்புவின் மாநாடு.. செம சர்ப்ரைஸ் கொடுத்த வெங்கட் பிரபு!

சிம்பு நடிக்கும் மாநாடு படம் குறித்து சர்ப்ரைஸ் அப்டேட்டை இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் சிம்பு. இவர் தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் திரைப்படத்தில் நடித்துள்ளார். 

 

இத்திரைப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இதை தொடர்ந்து தற்போது சிம்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் பிசியாக நடித்து வருகிறார். 

இந்நிலையில் இயக்குநர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் மாநாடு படம் குறித்து பதிவிட்டுள்ளார். நாளை காலை 9.09 மணிக்கு, மாநாடு படம் பற்றிய ஸ்பெஷல் அறிவிப்பு வெளியாகும் என அவர் பதிவிட்டுள்ளார். இத்துடன் Get Ready STR Fans என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 

இந்த ஸ்பெஷல் அறிவிப்பு மாநாடு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பற்றிதான் இருக்கும் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கிசுகிசுத்து வருவது குறிப்பிடத்தக்கது. 

From around the web

Trending Videos

Tamilnadu News