மனுசன் ஒரு முடிவோடு தான் இருக்கார்... உடனே திருமணம் நடக்கணும்... முடிவெடுத்த சிம்பு

குழந்தை நட்சத்திரமாக கோலிவுட்டில் அடியெடுத்து வைத்தவர் நடிகர் சிம்பு. அவரின் நடிப்புக்கும் ஸ்டைலுக்கும் எக்கசக்க ரசிகைகள் உண்டு. தொடர்ந்து, நடிகை நயன் மற்றும் ஹன்சிகாவுடன் காதலில் வேறு இருந்தார். ஆனால் கல்யாணம் தான் நடக்கவில்லை. ஒரு சமயத்தில் உட்ச நட்சத்திரமாக இருந்த சிம்பு இடையில் ஆள் காணவில்லை ரேஞ்சில் இருந்தார். தடாலடியாக உடம்பை குறைத்துக் கொண்டு மீண்டும் கோலிவுட்டிற்கு திரும்பி இருக்கிறார்.
பத்து தல, மாநாடு உள்பட வரிசையாக படங்களில் கமிட் ஆகி நடித்துக் கொண்டு இருக்கிறார். ரியல் லைபிலும் கமிட்டாக முடிவு எடுத்திருக்கிறார் போல அதனால் சிம்புவின் பெற்றோர்கள் அவருக்கு தீவிரமாக பெண் தேடி வருகிறார்கள். அந்தவகையில், சிம்பு உத்திரபிரதேச மாநிலத்தில் இருக்கும் வாரணாசிக்கு சென்றுள்ளார். அங்கு பிரசித்திப் பெற்ற கங்கை ஆற்றில் தீபம் ஏற்றி வழிபட்டுள்ளார். இப்படி செய்வது திருமணம் விரைவில் கூடி வரவேண்டும் என்பதற்காக செய்யும் பரிகாரம் எனக் கூறப்படுகிறது.
கடந்த காதலர் தினத்தில் தனது செல்லப் பிராணியிடம் காதலி வேண்டும் என விளையாட்டாக சிம்பு பேசிய வீடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது.