
Cinema News
போங்கடா நான் தனியா கொண்டாடுறேன்!.. மாநாடு வெற்றிக்காக ரசிகர்களை சந்திக்கும் சிம்பு….
Published on
By
தமிழ் திரையுலகில் தனது நடவடிக்கைகளால் கெட்ட பெயர் வாங்கியர் சிம்பு. ஆனால், ‘கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா’ என தான் நடிக்கும் படங்களில் பாடுவார். அவரே மாற நினைத்தாலும் அது நடப்பது இல்லை. இதற்கு சமீபத்தில் நடந்த மாநாடு படத்தின் வெற்றி விழாவே சாட்சி.
பல வருடங்களுக்கு பின் சிம்புவுக்கு ஹிட் கொடுத்துள்ள திரைப்படம் மாநாடு. இப்படம் நல்ல வசூலை பெற்றது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் வெற்றியை மாநாடு படக்குழுவினர் சமீபத்தில் கொண்டாடினர். இந்த விழாவில் படக்குழுவினர் மற்றும் இப்படத்தால் லாபமடைந்த திரைப்பட வினியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர். ஆனால், படத்தின் ஹீரோ சிம்பு இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை. அவர் வெந்து தணிந்தது காடு படப்பிடிப்பில் இருந்ததால் வர முடியவில்லை என சாக்கு சொல்லப்பட்டது. ஆனால், அது நம்பும் படியும் இல்லை. அதில் உண்மையும் இல்லை.
டி.ராஜேந்தர் குடும்பத்திற்கு 9 எண் மீது எப்போதும் ஒரு செண்டிமெண்ட் உண்டு. டி. ராஜேந்தரின் படங்களின் தலைப்பு பெரும்பாலும் 9 எழுத்துக்கள் இருக்கும். பல வருடங்களாகவே இதை அவர்கள் பின்பற்றி வருகின்றனர். சிம்பு நடிப்பில் உருவான ஈஸ்வரன், மாநாடு ஆகிய படங்கள் தொடர்பான அப்டேட்டுகள் அனைத்தும் இந்த செண்டிமெண்ட் நேரப்படியே வெளியிடப்பட்டது.
மாநாடு படம் வெற்றியை பெற்று ரூ.100 கோடி வசூலை நெருங்கியது. ஆனால், 9 எண் செண்டிமெண்ட் படி ரூ.108 கோடி வசூல் செய்ததாக நீங்கள் அறிவிக்க வேண்டும், வெற்றி விழா மேடையிலும் இதை போஸ்டர் அடித்து ஒட்ட வேண்டும் அப்போதுதான் வெற்றி விழாவுக்கு நான் வருவேன் என சிம்பு அப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியிடம் அடம்பிடித்துள்ளார். ஆனால், சுரேஷ் காமாட்சி இதை ஏற்கவில்லை. முடியாது என மறுத்துவிட்டார். இதில் கோபமடைந்த சிம்பு அந்த நிகழ்ச்சியை புறக்கணித்தார் எனக்கூறப்படுகிறது.
இந்நிலையில், மாநாடு வெற்றியை தனது ரசிகர்களுடன் கொண்டாட சிம்பு முடிவெடுத்துள்ளார். அது எங்கு, என்ன தேதி என்பது பற்றிய விபரங்களை அவர் விரைவில் அறிவிக்கவுள்ளார். அனேகமாக ஜனவரி 6ம் தேதி அந்த சந்திப்பு நிகழலாம் என செய்திகள் கசிந்துள்ளது.
மாநாடு படக்குழு Successful meet என நடத்தினால் சிம்பு அதற்கு போட்டியாக Thanks Giving meet நடத்துகிறார். மாநாடு படம் துவங்கிய போது பிரச்சனை ஏற்பட்டு அப்படத்திலிருந்து சிம்பு விலகி மகா மாநாடு என படம் எடுப்பேன் என அறிவித்தார். நான் மாறிவிட்டேன் என சிம்பு வெளியே கூறிக்கொள்கிறார்.
ஆனால், நடப்பதை பார்த்தால் அப்படி தெரியவில்லை….
TVK Stampede: விஜயின் கரூர் மக்கள் சந்திப்பின் போது ஏற்பட்ட தள்ளுமுள்ளு பிரச்னையில் 40க்கும் அதிகமானோர் உயிரிழந்து இருக்கும் நிலையில், பலர்...
Vijay TVK: நேற்று கரூரில் நடந்த அந்த துயர சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கின்றது. கரூரில் தனது பரப்புரையை நடத்துவதற்காக...
Tvk Stampede: தவெக தலைவர் விஜயின் கட்சி கூட்டத்தில் நடந்த தள்ளுமுள்ளுவில் சாவு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் எதிர்கட்சி தலைவர்...
Karur: தற்போது தமிழ் நாட்டு அரசியல் களமே பரபரப்பாக இருக்கின்றது.ஒட்டுமொத்த ஆளுங்கட்சி அமைச்சர்களும் கரூரை நோக்கி படையெடுத்திருக்கின்றனர். நேற்று கரூரில் நடந்த...
TVK Vijay: நேற்று ஒரு பெரிய துயர சம்பவம் தமிழ் நாட்டையே உலுக்கியது. தவெக தலைவர் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணமாக ஒவ்வொரு...