ஈஸ்வரனுக்கு கெட் அவுட் சொன்ன தியேட்டர்கள்.. ஓடிடி பக்கம் திரும்பிய சிம்பு

சிலம்பரசன் என்ற பெயருக்கே ரசிகர்கள் ஏராளம். பல வருடத்திற்கு சிம்பு நடிப்பில் வெளியாக இருக்கும் படம் ஈஸ்வரன். ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ தான் அவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம். சுசீந்திரன் இப்படத்தை இயக்கி இருக்கிறார். ஜோடியாக நிதி அகர்வால் நடிக்கிறார். பாரதிராஜாவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்தப் படம் பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைக்கு ஒப்புதல் அளித்ததால் இரண்டு பெரிய நட்சத்திரங்களின் படங்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், 100 சதவீத இருக்கைக்கு எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. இந்நிலையில், அரசு தனது அறிவிப்பை திரும்பபெறும் பட்சத்தில், மாஸ்டரை மட்டுமே வெளியிடுவோம் என தியேட்டர்கள் சங்கம் அறிவித்திருந்தது.
இதை தொடர்ந்து, படக்குழு இந்தியாவிற்கு வெளியே OLYFILX என்னும் ஓடிடி மூலம் வெளியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தளத்தில் வெளிநாட்டினர் மட்டுமே பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Tamil Film #Eeswaran is premiering on an OTT platform Olyflix in the same day as Theatrical release via pay-per-view in the overseas market. pic.twitter.com/7AETXWzL1z
— LetsOTT GLOBAL (@LetsOTT) January 11, 2021