Categories: Cinema News latest news

நம்ப வைத்து கழட்டிவிட்ட சிம்பு.!? கைகொடுத்த சென்சேஷனல் காமெடி ஹீரோ..

மாநாடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்ததை தொடர்ந்து, சினிமாவில் மீண்டும் சுறுசுறுப்பாக சிம்பு இயங்க தொடங்கினார். அப்போது தொடர்ச்சியாக மூன்று படங்களில் நடிக்க ஒப்பந்தமாகினார்.

அதில் ஒரு திரைப்படம் வெந்து தணிந்தது காடு. அது இறுதி கட்டத்தை நோக்கி செல்கின்றது. அடுத்ததாக பத்து தல. இந்த திரைப்படம் இன்னும் சிறிது நாட்கள் மட்டுமே ஷூட்டிங் மீதம் உள்ளது. மூன்றாவதாக ஒப்புக்கொண்ட திரைப்படம் கொரோனா குமார்.

இந்த திரைப்படத்தை இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தை இயக்கிய கோகுல் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கான முதல் பாடல் கூட வெளியானது. இப்படத்தில் இயக்குனர் ஷங்கர் மகள் அதிதி ஷங்கர் ஹீரோயினாக நடிக்க உள்ளார் என்றும், பகத் பாசில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் கூறப்பட்டு வந்தது.

ஏனோ சில காரணங்களால் அந்த மாநாடு திரைப்படம் அடுத்த கட்டத்திற்கு நகராமல் இருக்கிறது, இதனால் கோகுல் அடுத்த வேலையைப் பார்க்க ஆரம்பித்து விட்டாராம். தற்போது சிம்பு வெவ்வேறு படங்களில் பிசியாக இருக்கிறார். கோகுல் தற்போது சிங்கப்பூர் சலூன் எனும் திரைப்படத்தை இயக்க தயாராகிவிட்டார். ஆர்ஜே பாலாஜி படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளார். இப்படத்தின் சூட்டிங் விரைவில் ஆரம்பமாகும் என கூறப்படுகிறது.

இதையும் படியுங்களேன் – எங்களுக்கும் கஷ்டம் இருக்கு…நாங்களும் கஷ்டப்படுறோம்.. இணையத்தில் கதறிய குக் வித் கோமாளி சிவாங்கி.!

ஆரம்பத்தில் இப்படத்தில் சிம்பு நடிக்காமல் இருந்ததற்கு காரணம் இப்படத்தில் சம்பள விவகாரம் தான் என்று ஆரம்பத்தில் கிசுகிசுக்கப்பட்டது. இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஒருவேளை கொரோனா காலம் எல்லாம் முடிந்து விட்டது. இப்போது கொரோனா குமார் என தலைப்பு வைத்து படமாக்க ஆரம்பித்தால் அது ரசிகர்கள் மத்தியில் சரியாக எடுபடாது என்று படக்குழு முடிவு எடுத்துவிட்டதா என்று தெரியவில்லை. தற்போதைக்கு கொரோனா குமார் இல்லை என்ற தகவல் தான் சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

Manikandan
Published by
Manikandan