Categories: Cinema News latest news

விழிபிதுங்கி நிற்கும் படக்குழு.! ஓடி ஒளியும் சிம்பு.!? கிடைத்த நல்ல வாய்ப்பை காப்பாதிக்கோங்க.!

நடிகர் சிம்பு மாநாடு திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து மிகவும் உற்சாகமாக அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியை மிகவும் உற்சாகத்துடன் தொகுத்து வழங்கி வருகிறார்.

அவர் அடுத்தடுத்த படங்களில் தீவிரமாக நடித்து வருகிறார் என்று ரசிகர்கள் நினைத்திருக்கையில் சினிமா வட்டாரங்கள் சிம்புவை பற்றி வேறு விதமாக கிசுகிசுத்து வருகின்றன. அவர் சம்பளத்தை ஏற்றி விட்டார் என்றும், மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து சிம்புவின் மார்க்கெட் பழைய நிலைமைக்கு வந்துள்ளது. அதனால் அவர் சம்பளம் ஏற்றுவது மற்ற நடிகர்கள் செய்வது போல தான் என்கிறது கோடம்பாக்கம்.

ஆனால் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை என்பதே தற்போதைய குற்றச்சாட்டு. ஆம், தற்போது வெந்து தணிந்தது காடு, பத்து தல ஆகிய படங்களில் சிம்பு நடித்து கொடுக்க வேண்டியிருக்கிறதாம். அதற்கான சூட்டிங்கில் சிம்பு இன்னும் கலந்துகொள்ளவில்லை என கூறப்படுகிறது.

படக்குழு தீவிரமாக முயற்சித்தும் சிம்பு எங்கிருக்கிறார் எப்போது வருவார் என அவரது நெருங்கிய வட்டாரங்களில் விசாரித்தால் கூட சிம்புவுடன் நான் இப்போது தொடர்பில் இல்லை, நான் விலகிவிட்டேன் என்று பதில்கள் அதிகமாக வருகிறதாம்.

இதையும் படியுங்களேன் – உங்கள தோழியாக தான் பாக்குறேன்.! தனுஷ் போட்ட ஒரு ட்வீட்.! அதிர்ச்சியில் உறைந்து போன ரசிகர்கள்.!

இதனால் சிம்புவை தற்போது தொடர்பு கொள்ள முடியவில்லையாம். அதனால் அடுத்தடுத்த படத்தை எப்படி முடிப்பது என்று தெரியாமல் அவரை ஒப்பந்தம் செய்த படக்குழு தற்போது திகைத்து இருக்கிறதாம்.

ஒருவேளை பத்து தல படத்திருக்காக உடல் எடை ஏற்ற சிம்பு தயாராகிவிட்டாரா? அல்லது அடுத்த படத்துக்கான சம்பளம் போதவில்லை என்று யாருக்கும் தெரியாமல் ஸ்ட்ரைக் செய்கிறாரா என்று இன்னும் தெளிவான தகவல்கள் எதுவும் தெரியவில்லை. சிம்பு படத்தின் அடுத்தடுத்த அப்டேட் வெளியானதால் அதற்கான தீர்வு கிடைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Manikandan
Published by
Manikandan