சிம்பு நடிப்பில் தற்போது வெந்து தணிந்தது காடு திரைப்படம் தயாராகி வருகிறது. அந்த படத்தின் சூட்டிங் இன்னும் முடிந்த பாடில்லை. அதற்கு முன்னரே சிம்பு, கௌதம் கார்த்திக் உடன் இணைந்து பத்து தல எனும் திரைப்படம் தயாராகும் என அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் அது நிறுத்தப்பட்டு தற்போது இயக்குனர் மாறி மீண்டும் பத்து தல திரைப்படம் தயாராகி வருகிறது.
வெந்து தணிந்தது காடு திரைப் படத்தை முடித்துவிட்டு சிம்பு பத்து தல படத்தில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது திடீரென பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதாக அறிவித்து விட்டார்.
இதையும் படியுங்களேன் – ஏதே வலிமை வசூல் 76 கோடியா.?! கொஞ்சம் நம்புற மாறி சொல்லுங்க போனி மாம்ஸ்.! கதறும் ரசிகர்கள்.!
இதன் காரணமாக எப்போது வெந்து தணிந்தது காடு திரைப்பட சூட்டிங் முடிந்து அடுத்து பிக்பாஸ் முடிந்து வருவார் என எதிர்பார்த்த படக்குழுவுக்கு, வெளியான செய்தி என்னவென்றால், பிக்பாஸ் அல்டிமேட் வாரத்தின் இறுதி நாள் மட்டுமே இருக்கும். அதனால் இடைப்பட்ட நாளில் மற்ற பட வேலைகளை சிம்பு கவனிப்பார் என்று சிம்பு தரப்பு கூறியுள்ளது.
எப்படியும் மார்ச் மாதம் கண்டிப்பாக பத்து தல சூட்டிங்கில் சிம்பு கலந்து கொள்வார் என கூறப்படுகிறது.
TVK Vijay:…
TVK Vijay:…
தமிழக வெற்றிக்…
TVK Vijay:…
Vijay TVK:…