Categories: Cinema News Gossips latest news

வெளிச்சத்திற்கு வந்த சிம்பு – நிதி அகர்வால் காதல் விவகாரம்.!? இந்த முறையாவது காதல் கைகூடுமா.?!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர்  சிம்பு. இவரது திரைப்படங்களுக்கு பஞ்சம் ஏற்பட்டாலும் இவர் குறித்ததான வதந்திக்கு மட்டும் பஞ்சமே  ஏற்படுவதில்லை. ஆரம்பத்தில் சிம்பு நயன்தாராவை காதலித்ததாக கூறப்பட்ட நிலையில், சில ஆண்டுகள் கழித்து இவர்களுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிட்டதாக கூறப்பட்டது.

 

இதன் பின்பதாக சிம்பு ஹன்ஷிகாவை காதலிப்பதாக வதந்திகள்  வெளியாகியது. அதன் பின்பு இந்த காதலும் அவருக்கு கை கொடுக்கவில்லை. எனவே இவர்கள் இருவருக்கும் இடையேயான காதலும் பிரிவில் முடிந்ததாக பேசப்பட்டது.  இந்நிலையில், தற்பொழுது சிம்பு அடுத்ததாக ஒரு நடிகையை காதலிப்பதாகவும், இருவரும் ஒரே வீட்டில் வசித்து வருவதாகவும், விரைவில் திருமணம் நடக்க உள்ளது எனவும் பேசப்படுகிறது.

அந்த நடிகை வேறு யாரும் இல்லை. பூமி எனும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகை நிதி அகர்வால் தான். இவர் நடிகர் சிம்புவுடன் இணைந்து ஈஸ்வரன் எனும் படத்திலும் நடித்திருந்தார். ஈஸ்வரன் படப்பிடிப்பின் பொழுதே இருவருக்கும் இடையில் காதல் ஏற்பட்டதாகவும், இருவரும் தற்பொழுது லிவிங் ரிலேஷனில் ஒரே வீட்டில் இருப்பதாகவும், விரைவில் இருவருக்கும் திருமணம் நடைபெற உள்ளதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது.

ஏற்கனவே சிம்புவின் இரண்டு காதல் பிரிவில் முடிந்த நிலையில், இந்த காதலாவது கைகொடுக்குமா என அவரது ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் சிம்பு இந்த கிசுகிசுப்பு உண்மை தானா என்பதற்கு முற்றுப்புள்ளி வைப்பார் என நம்பலாம்.

Manikandan
Published by
Manikandan