எனக்கே விரலா?.. விஜய் டிரெஸ் கோட்.. சட்டென பதறிய சிம்பு!.. நல்லா இருக்கிறது புடிக்கலையா?..
நடிகர் சிம்பு இன்று நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தனது வாக்கை பதிவு செய்தார். சென்னை பகுதியில் அமைந்துள்ள வாக்குச்சாவடிக்கு மாலை நேரம் வந்த அவர், பொதுமக்களுடன் வரிசையில் நின்று தனது ஜனநாயக உரிமையை பயன்படுத்தினார்.
வாக்களித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சிம்பு, அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். “ஒவ்வொருவரின் வாக்கும் முக்கியமானது. இளைஞர்கள் குறிப்பாக வந்து வாக்களிக்க வேண்டும்,” என்று அவர் தெரிவித்தார்.
விஜய் டிரெஸ் கோட் என வெள்ளை சட்டை மற்றும் காக்கி பேண்ட் தான் இன்று நடைபெற்ற தமிழ்நாடு தேர்தலில் செம டிரெண்ட் ஆனது. நடிகைகள் முதல் இளம் பெண்கள் வரை அதை அணிந்து வந்து ஓட்டுப்போட்டனர்.
சினிமா பிரபலங்களில், சியான் விக்ரம், அனிருத், ஜெய், ரச்சிதா மகாலட்சுமி, சிபிராஜ் சத்யராஜ் உள்ளிட்ட பலர் அந்த டிரெஸ் கோடில் வந்தனர். எதிர்பாராத விதமாக நடிகர் சிம்புவும் அதே கலர் உடையை அணிந்துக் கொண்டு வந்த நிலையில், அண்ணா டிரெஸ் கோட் சூப்பர் என சிலர் கூற, அய்யய்யோ வெள்ளை சட்டை மாட்டிட்டு வந்தது குத்தமா எதிலும் கோர்த்து விட்டுடாதீங்க என்றார். ஆனால், ரசிகர்கள் அவர் விஜய்க்குத்தான் ஆதரவு எனக் கூறி வருகின்றனர்.
மேலும், நீங்க அரசியலுக்கு வருவீங்களா என பத்திரிகையாளர்கள் கேட்க, இப்போதான் சினிமாவிலேயே பல பிரச்னைகளை சமாளித்து நடித்துக் கொண்டிருக்கிறேன். நான் நல்லா இருக்கிறது உங்களுக்கு பிடிக்கலையா? என தனது பாணியில் ஜாலியாக பேசிவிட்டுச் சென்றார். மை வைத்த விரலை காட்டச் சொல்ல, எனக்கே விரலா என சிம்பு பஞ்ச் அடித்ததும் ரசிகர்களை கவர்ந்தது.
வாக்குச்சாவடியில் சிம்புவை பார்த்த ரசிகர்கள் உற்சாகமடைந்து அவருடன் புகைப்படங்கள் எடுக்க முயன்றனர். இருப்பினும், எந்த இடையூறும் இல்லாமல் அவர் தனது வாக்கை பதிவு செய்து வெளியேறினார்.
தமிழகத்தில் இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் மற்றும் திரைப்பட பிரபலங்கள் உட்பட பலரும் ஆர்வத்துடன் வந்து வாக்களித்து வருகின்றனர்.
