சினிமாவின் லிட்டில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. இவர் தற்போது பத்துதல படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வருகிறார். மேலும் இவர் நடித்து ரிலீஸ்க்காக காத்துக் கொண்டிருக்கும் படம் வெந்து தணிந்தது காடு.
சிலபல பிரச்சினைகளால் நீண்ட நாள்களாக சினிமாவிம் பார்க்க முடியாத இவரை மாநாடு படம் மிகவும் உயர்த்திக் காட்டியது. அந்த படத்தின் வெற்றி இவரின் மார்க்கெட்டையே உயர்த்தியது. சினிமாவில் அதிக கிசுகிசுப்பு உள்ளான நடிகர்களில் நடிகர் சிம்புவும் ஒருத்தர்.
நயன்தாரா, ஹன்சிகா, என சினிமாவில் பல நடிகைகளுடன் காதல் வையப்பட்டார். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். மேலும் ஈஸ்வரன் படத்தில் நடித்தன் மூலம் அந்த படத்தில் நடித்த நிதி அகர்வாலுடன் காதலில் இருக்கிறார் என்ற செய்தியும் வைரலாகி வருகின்றதுஇந்த நிலையில் ஒரு பேட்டியில் வலைப்பேச்சு அந்தனன் தான் காதலிச்ச ஒருத்தி இன்னொருவருடன் நெருங்கி பழகும் போது அந்த பெண்ணுடன் மீண்டும் நடிக்கும் வாய்ப்பு ஏற்பட்டால் எப்படி உணர்வீர்கள்? என கேட்டார். அவர் கேட்பதை பார்க்கும் போது ’இது நம்ம ஆளு’ படத்தை கருத்தில் கொண்டுதான் கேட்டிருக்கிறார்.
அதற்கு பதில் கூறிய சிம்பு “ நாம் காதலிக்கும் பெண் நம்முடன் தான் இருக்க வேண்டும் என அவசியமில்லை. அவள் எங்கு எப்படி யாருடன் இருந்தாலும் நல்லா இருக்கவேண்டும் என எண்ணுவதே காதல். நான் அப்படிதான் நினைக்கிறேன். அதையும் மீறி என் கூட இருக்கவேண்டும் , என்னுடன் தான் பேசவேண்டும் என நினைப்பது காதல் இல்லை. பிச்சை” என கூறினார். மேலும் கூறுகையில் காதல் என்னைக்கும் அழிவதில்லை , காதலர்கள் தான் அழிந்திருக்கிறார்கள் என கூறினார். என்னை 4 பேர் தாண்டி போயிருக்கின்றனர். அதற்கு காரணம் அவர்கள் இல்லை. நான் தான் காரணம் என்றும் கூறினார்.
Vijay TVK:…
Idli kadai…
ரஜினி கமல்…
Rajasaab: ஏற்கனவே…