Categories: Cinema News latest news

அந்த வண்டிய கழுவுனாதான் நான் நடிப்பேன்.. படப்பிடிப்பில் சிம்பு செய்த அடாவடி…

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து கடந்த ஆண்டு நவம்பர்-25ம் தேதி வெளியான திரைப்படம் மாநாடு. தமிழில் முதன் முதலாக ஒரு லூப் டைம் திரில்லராக இப்படம் வெளியாகி வெற்றியும் பெற்றது. இப்படத்தில், கல்யாணி பிரியதர்ஷினி, பிரேம் ஜி, எஸ். ஜே. சூர்யா என தமிழ் திரைப்பட முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளனர்.

படம் வெளியாகி 20 நாட்களில் இப்படம் ரூ.100 கோடி வசூல் செய்து 100 கோடி கிளப்பில் இணைந்ததாக செய்திகள் வெளியானது. இதனை, சிம்பு ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தனர். அதோடு, இப்படத்தில் வெற்றி விழாவையும் படக்குழு சந்தோசமாக கொண்டாடியது.

இந்நிலையில், மாநாடு திரைப்படம் இந்திய சினிமாவில் எந்த திரைப்படமும் செய்யாத சாதனையை நிகழ்த்தியுள்ளது. இப்படத்தின் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளின் ரீமேக் உரிமை இதுவரை விலை போகாத அளவுக்கு விலை போயுள்ளதாம்.

மாநாடு திரைப்படத்தில் பைக் ஓட்டும் படப்பிடிப்பின்போது நடிகர் சிம்பு விற்கு டப்பிங் போடும் ஒரு நபர் முதலில் பைக்கை ஓட்டுகிறார். சிம்புக்கு பதிலாக டப்பிங் செய்ய பைக்கை ஒட்டிய பிறகு தான். சிம்பு ஓட்டுவது போல் காட்சி எடுக்கப்படும், அந்த காட்சியில் அந்த நபர் ஓட்டிய பைக்கை சிம்பு ஓட்டுவதற்கு முன்பு பைக் முழுவதும் சானிடைசர் சானிடைசர் போட்டு முழுவதும் சுத்தம் செய்து தாருங்கள் என்று கூறியுள்ளாராம்.

இதையும் படியுங்களேன்- பாகுபலி ராசி பார்க்கும் RRR படக்குழு.! இது சரியா வருமா.! திகைக்கும் தியேட்டர்கள்.!

அவரது கேட்டது போல், படக்குழு சானிடைசர் போட்டு பைக்கை சுத்தம் செய்து கொடுத்துள்ளனர். இதன் பின் ஷூட்டிங்க் முழுவதும் எடுக்கப்பட்டது. காரணம் என்னெவென்றால் கொரோனாவிற்கு பயந்து சிம்பு செய்த வேலையைப் பார்த்து படக்குழு அதிர்ச்சி அடைந்தனர்.

Manikandan
Published by
Manikandan