சிங்கப்பூர் போன சிம்பு.. வருவாரா மாட்டாரா? இப்படி ஆகிப் போச்சே

by Rohini |
simbu
X

simbu

சிம்பு:

சிம்புவின் ரசிகர்கள் ஒரு பக்கம் தன்னுடைய தலைவன் படம் வருமா வராதா? எப்பொழுது வரும்? நடிப்பாரா மாட்டாரா? என்ற நிலைமைக்கு போய்விட்டார்கள். பத்து தல படத்துக்கு பிறகு இரண்டு வருடங்களாக சிம்புவை பெரிய திரையில் பார்க்க முடிவதே இல்லை. அந்த படத்திற்கு பிறகு அவர் உடனடியாக கமல் தயாரிப்பில் 48வது படத்தில் கமிட் ஆகி இருந்தார். தேசிங்கு பெரியசாமி அந்த படத்தை இயக்குவதாக இருந்தது. பத்து தல, வெந்து தணிந்தது காடு, மாநாடு போன்ற படங்களுக்குப் பிறகு இந்த படம் விறுவிறுப்பாக ஆரம்பிக்கப்பட்டது.

ஆனால் படம் ப்ரீ புரடக்‌ஷனோடு நிறுத்தப்பட்டது. அதன் பிறகு அந்த படம் டேக் ஆப் ஆகவே இல்லை. அதன் பிறகு திடீரென கமல் நடிப்பில் மணிரத்தினம் இயக்கத்தில் தயாராகிக் கொண்டிருந்த தக் லைப்ஃப் படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் கமிட்டானார் சிம்பு. சரி ஏதாவது ஒரு படத்தின் நடித்தால் போதும் என்ற அளவுக்கு சிம்புவின் ரசிகர்கள் ஆறுதலடைந்தனர். தக் லைஃப் படம் அடுத்த வருடம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அவருடைய 48வது படத்தையாவது மீண்டும் தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ராஜ்கமல் நிறுவனம் விலகல்:

ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் இருந்து விலக அந்த படத்தை தானே தயாரிப்பதாக இருந்தார் சிம்பு. ஆனால் திடீரென மும்பையில் இருந்து ஒரு நிறுவனம் தயாரிக்கப் போகிறது என்றெல்லாம் பல செய்திகள் வெளியானது. ஒரு கட்டத்தில் அந்த படம் அப்படியே டிராப்பானது என்றும் சொல்லப்பட்டது. இப்படி சிம்புவின் படம் குறித்த செய்திகள் நெகட்டிவ் ஆகவே வெளிவந்து கொண்டிருந்தன .இதற்கிடையில் திடீரென சிம்பு சிங்கப்பூர் சென்ற தகவல் இணையத்தில் வைரலானது. அங்கு என்ன வேலை அவருக்கு என விசாரித்த போது சிங்கப்பூரில் யுவன் சங்கர் ராஜா ஒரு இசை கச்சேரியை ஏற்பாடு செய்திருந்தார்.

அவருடன் சேர்ந்து சிம்புவும் பாடல்கள் பாட போவதாக அறிவிப்பு வெளியானது. அது சம்பந்தமான புகைப்படம் வெளியானது. அதில் சிம்பு யுவன் காம்போவில் வெளியான பாடல்களில் ஒரு ஆறு பாடல்களை சிம்புவே அந்த இசை கச்சேரியில் பாடி ரசிகர்களை குஷிப்படுத்தி இருக்கிறார். அவர் நன்கு ஆட கூடியவர் என்பதாலும் பாடும் போதே செம வைப்பாக ஆடிக்கொண்டோ பாடி இருக்கிறார். இது சிங்கப்பூர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தி இருக்கிறது.

150 பாடல்களா?

அது மட்டுமில்லாமல் சிம்பு இதுவரைக்கும் கிட்டத்தட்ட 150 பாடல்களை பாடி இருக்கிறாராம். கிட்டத்தட்ட 40 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் இவர் தன் படங்களிலேயே பாடல்களை பாடுயதோடு இல்லாமல் மற்ற நடிகர்களுக்காகவும் பாடியிருக்கிறார். அந்த வகையில் 150 பாடல்களை பாடியிருக்கிறார். சிங்கப்பூரில் நடந்த அந்த நிகழ்ச்சிக்கு பிறகு உலக அளவில் இருந்து சிம்புவுக்கு அழைப்பு வந்து கொண்டிருக்கிறது.

நீங்களும் தனியாக ஒரு இசைக்கு சரி நடத்தலாம் என அவரை அணுகியதாக சொல்லப்படுகிறது. அதனால் இப்போது சிம்புவும் 150 பாடல்களில் செலெக்ட்டிவாக ஒரு 20 பாடல்களை வைத்து தனியாக இசைக்கச்சேரி நடத்தி விடலாம் என்ற முடிவுக்கு சிம்பு வந்திருப்பதாக கோடம்பாக்கத்தில் ஒரு செய்தி உலா வந்து கொண்டிருக்கிறது. இதை அறிந்த ரசிகர்கள் தலைவா உன்னை பெரிய திரையில் பார்க்க ஆசைப்படுகிறோம். நீ என்னான்னா ஊர் ஊராக சுற்றிக் கொண்டிருக்கிறீயே என ஆதங்கத்தில் புலம்பி வருகின்றனர்.

Next Story