செம டிரெண்டிங்கில் சிம்பு.. டி-ஷர்ட்டில் அப்படி என்ன இருந்தது?
நடிகர் சிம்பு தற்போது தனது உடல் எடையையெல்லாம் குறைத்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தது மட்டுமின்றி, தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
Mon, 21 Dec 2020

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் இவர் நடித்து முடித்துள்ள ஈஸ்வரன் திரைப்படம், பொங்கல் அன்று திரைக்கு வர தயாராக உள்ளது. மேலும் தற்போது இவர் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தில் முழு வேகத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போதுதெல்லாம் அடிக்கடி நடிகர் சிம்புவின் புதிய புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் தற்போது ERASE HISTORY, CREATE RECORDS என்ற கருத்துடன் டி-ஷர்ட் அணிந்தபடி நடிகர் சிம்பு தனது புதிய புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அது தற்போது செம டிரெண்டிகில் உள்ளது.