Categories: Cinema News latest news

நான் கல்யாணம் பண்ணா இந்த மாதிரி பொண்ண தான் பண்ணுவேன்…. சிம்பு ஓப்பன் டாக்….!

கோலிவுட்டில் பல ஆண்டுகளாக தனது திருமணத்திற்காக காத்திருக்கும் நடிகர் தான் சிம்பு. சினிமாவில் ஓரளவிற்கு சாதித்திருந்தாலும் இவரின் நிஜ வாழ்க்கையில் பல பிரச்சனைகளையும், சர்ச்சைகளையும் சந்தித்து வருகிறார். மேலும் இவரின் சகோதரருக்கு திருமணம் முடிந்த நிலையில் சிம்புவுக்கு இன்னும் திருமணமாகாததால் அவரின் அம்மா அப்பா மிகுந்த மனவேதனையில் உள்ளனர்.

simbu-nithi agarwal

மேலும் சிம்புவுக்கு திருமணம் செய்து வைக்க பலமுறை முயற்சி செய்தும் பலனளிக்கவில்லை. சமீபத்தில் கூட சிம்புவிற்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்திருந்தனர். ஆனால் ஈஸ்வரன் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நிதி அகர்வாலுடன் சிம்பு காதலில் இருப்பதாக வெளியான தகவலால் அந்த திருமணம் தடைபட்டது.

மேலும் இருவரும் ஒன்றாக ஒரே வீட்டில் லிவிங் டூ கெதர் உறவில் இருப்பதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் செய்திகள் வெளியானதால் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் தனக்கு எந்த மாதிரி பெண் வேண்டும் என்பதை நடிகர் சிம்பு சமீபத்தில் கூறியுள்ளார்.

simbu-yuvan

அதன்படி அவர் கூறியிருப்பதாவது, “இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா எவ்வளவு கொடுமைப்படுத்தினாலும் மிகவும் பொறுமையாக இருக்கிறார். அவரை போல ஒரு பொறுமைசாலியான பெண்ணை தான் நான் திருமணம் செய்துகொள்வேன்” என கூறியுள்ளார்.

உங்க ஆசையெல்லாம் சரி தான் பாஸ் பட் இட்ஸ் டூ லேட். இனிமே டிமாண்ட் பண்ணாம கிடைக்குற பொண்ண கல்யாணம் பண்ணிக்கோங்க. ஏன்னா உங்களுக்கு பொண்ணு கிடைக்கறதே கஷ்டமா இருக்கு என நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.

ராம் சுதன்
Published by
ராம் சுதன்