Connect with us
simbu

Cinema News

குறி வச்சாச்சு.. வெளியான ‘தக் லைஃப்’ சிம்புவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்! இது வேற ரகம்

Actor Simbu: இன்று அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த கமலின் தக் லைப் படத்தின் அந்த போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதுவும் சிம்புவின் பர்ஸ்ட் லுக் இந்த படத்தில் எப்படி இருக்க போகிறது என்ற ஒரு ஆர்வம் சிம்பு ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைத்து நடிகர் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தி இருந்தது.

ஏனெனில் 10 தல படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட ஒரு வருடத்தையும் கடந்து சிம்புவின் எந்த படமும் ரிலீஸ் ஆகாத நிலையில் திடீரென தக் லைஃப் படத்தில் சிம்பு இணைந்தது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இடையில் கமல் தயாரிக்க தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக இருந்த அவருடைய 48வது படம் இன்னும் ஆரம்பிக்கப்படாமலேயே இருக்கின்றது.

இதையும் படிங்க: இது என்னோட டைம்.. வெளியான ‘தக் லைஃப்’ சிம்புவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்! இது வேற ரகம்

இதற்கிடையில் தக் லைஃப் படத்தில் சிம்புவும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறார் என்ற அறிவிப்பு வெளியானதும் ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. ஏனெனில் சிம்புவும் கமலும் குழந்தை நட்சத்திரமாகவே இந்த சினிமாவில் அறிமுகமாகி சினிமாவின் அத்தனை நுணுக்கங்களையும் கற்று அறிந்தவர்கள். அவர்கள் இருவரையும் ஒரே திரையில் பார்க்க ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியிலும் ஒரு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

simbu

simbu

அந்த வகையில் தக் லைப் படத்தில் சிம்பு எந்த மாதிரியான கேரக்டரில் எந்த மாதிரியான ஒரு தோற்றத்தில் வரப்போகிறார் என்ற ஆர்வம் இருந்து வந்த நிலையில் இன்று வெளியான அந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கையில் துப்பாக்கியுடன் மாஸாக போஸ்கொடுத்து பட்டையை கிளப்புகிற மாதிரி அந்த போஸ்டர் வெளியாகியிருக்கிறது.

இதையும் படிங்க: விடாமுயற்சி பட ஹீரோயின் பார்ல அடிக்கிற கூத்தை பாருங்க!.. தொடையழகை காட்டி டார்ச்சர் வேற பண்றாரே!..

Continue Reading

More in Cinema News

To Top