×

பொன்னியின் செல்வன்’ படத்தில் இணைகிறாரா சிம்பு?

பிரபல இயக்குனர் மணிரத்னம் தற்போது ’பொன்னியின் செல்வன்’ என்ற வரலாற்று திரைப்படத்தை பிரமாண்டமாக இயக்கி வருகிறார். இரண்டு பாகங்களாக ரூபாய் 500 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்தப் படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம் ஐஸ்வர்யா ராய் உள்பட இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 

 

இந்த படத்தின் முதல் பாகம் 2021 ஆம் ஆண்டு இறுதியிலும், இரண்டாம் பாகம் 2022ஆம் ஆண்டில் வெளிவரும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் ஒரு முக்கிய வேடத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக ஒரு செய்தி வெளியாகி உள்ளது

சிம்பு தற்போது மாநாடு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தை முடித்துவிட்டு அவர் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது. ஆனால் இன்னொரு தகவல் சற்று வித்தியாசமாக வெளிவந்துள்ளது. பொன்னியின் செல்வன்’ முதல் பாகத்திற்கும் இரண்டாம் பாகத்துக்கும் இடையே ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியை மணிரத்னம் எடுக்க உள்ளார் என்றும் அந்த இடைவெளியில் ஒரு படத்தை அவர் இயக்க இருப்பதாகவும் அந்த படத்தில்தான் சிம்பு நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது

எது எப்படியோ மணிரத்தினம் இயக்கத்தில் சிம்பு மீண்டும் நடிக்க உள்ளார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிறது. ஏற்கனவே மணிரத்னம் இயக்கிய ’செக்கச்சிவந்த வானம்’ படத்தில் சிம்பு நடித்து இருந்தார் என்பது தெரிந்ததே

From around the web

Trending Videos

Tamilnadu News