×

அற்புதங்களை சினிமாவில் நிகழ்த்திய பாடல் ஆசான் - எஸ்.பி.பி குறித்து சிம்பு உருக்கம்

தமிழ் சினிமாவின் மூத்த பாடகர்களில் ஒருவரான எஸ்.பி பாலசுப்ரமணியம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே
 

இவரின் உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாகவும், பின்னடைவு அடைந்திருப்பதாகவும் மாறிமாறி செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது.. அவர் விரைவில் நலமடைய வேண்டும் என திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் பிரார்த்தனை செய்து வருகின்றனர். 

ஏற்கனவே இசைஞானி இளையராஜா ஒரு உருக்கமான வீடியோவை வெளியிட்டிருந்த நிலையில், சமீபத்தில் பாரதிராஜாவும் கண்ணீர் ததும்ப பேசி ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார்.

மேலும், எஸ்.பி.பி.சார் விரைவில் குணமடைய வேண்டும் என நாளை மாலை 6மணி முதல் 6.5 வரை 5 நிமிடம் நாம் அனைவரும் ஒன்றாக பிரார்த்தனை செய்வோம்’ என நடிகர் கார்த்தி, பாரதிராஜா,கமல்ஹாசன், ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட திரைத்துறையினர் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்நிலையில், நடிகர் சிம்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

உயிரினும் மேலான ரசிகர்களுக்கும், நண்பர்களுக்கும், பாடல் கேட்டு வாழும் என் போன்ற அனைத்து மக்களுக்கும் வணக்கங்கள். எத்தனையோ பேரை உயிர்த்த குரல் அது. எத்தனையோ நாட்களைக் கடந்து வரச் செய்த வரப் பாடல்கள் அவருடையது.

இனிமை என்ற வார்த்தையை உணர்வுப் பூர்வமாக உணர அவர் பாடக் கேட்டாலே போதும். அற்புதங்களை தமிழ் சினிமாவில் நிகழ்த்திய பாடல் ஆசான் அவர்.
இன்று மருத்துவமனையிலிருந்து மீண்டு வரும் வரத்திற்காய் காத்திருக்கிறார். நம் வேண்டும் என்னும் ஒருமித்த எண்ணம் அவரிடம் அற்புதங்கள் நிகழ்த்தி நம்மிடையே மீண்டும் அழைத்து வர வேண்டும். எஸ்.பி.பி. என்பது ஒரு பெயரல்ல. அது காற்றை இன்னிசை ஆக்கிய மருந்து. அவரின் மீண்டு வருவது நமக்கு மிக முக்கியம்.

லெஜண்டுகளை நம்மோடு பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வது அவசியம். அவர்கள் பாடிக்கொண்டு, நம்மிடையே இருப்பதை கடவுளிடம் கெஞ்சிக் கேட்டு மீட்டு வரவேண்டும். நம் பாடும் நிலா எழுந்து வரவேண்டு நம் இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்கள் முன்னெடுப்பின்படி, நாளை 20ம் தேதி வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு நாம் அனைவரும் எஸ்.பி.பி. அவர்களின் பாடலை ஒலிக்கவிட்டு அவருக்காக வேண்டிக் கொள்ள கேட்டுக் கொள்கிறேன்.

வேண்டுதலின் பலனாய் அவர் மீண்டு வருவார் என்ற நம்பிக்கையோடு உங்களில் ஒருவனாய்...’

என உருக்கமாய் குறிப்பிட்டுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News