நேற்று பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது நடிகர் சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தின் ஆடியோ லாஞ்ச் விழா. வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடந்த இந்த விழாவிற்கு படக்குழு உட்பட பல்வேறு நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் தயாரான படம் தான் வெந்து தணிந்தது காடு.
இந்த படத்திற்கு ஏஆர். ரகுமான் இசையமைத்திருக்கிறார். பல்வேறு பிரச்சினைகளை தாண்டி கோலாகலமாக நடந்து முடிந்திருக்கிறது படத்தின் இசை வெளியீட்டு விழா. கமல்ஹாசன் முக்கிய விருந்தினராக இந்த விழாவிற்கு வந்திருந்தார்.
இதையும் படிங்கள் : என் ராசாவின் மனசிலே 2 எப்போது வெளிவரும்? சொல்கிறார்……இயக்குனர் ராஜ்கிரண்
நேற்று மாலை நடைபெற்ற இவ்விழாவில் நடிகர் சிம்புவின் வருகையை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தனர் ரசிகர்கள். அரங்கத்திற்குள் ஹெலிகாப்டர் இறங்கியது. ஒரு நாளுக்கு 2.50 லட்சம் வாடகையோடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாம் ஹெலிகாப்டர். அந்த ஹெலிகாப்டரில் சிம்புவையும் கமலையும் அழைத்து வர ஏற்பாடு செய்திருந்தாராம் படத்தின் தயாரிப்பாளர் வேல்ஸ்.
இதையும் படிங்கள் : கடைசில நீங்களும் ‘அந்த’ லிஸ்ட்ல சேர்ந்துடீங்களே.?! நம்ம பொம்மியின் ஆட்டம் ஆரம்பம்….
ஆனால் கமலும் சிம்புவும் அதை மறுத்து காரில் வந்திறங்கியிருக்கின்றனர். பின்னர் ஏற்பாடு செய்யப்பட்ட ஹெலிகாப்டரை என்ன செய்வதென்று தெரியாமல் வேல்ஸ் நிறுவனர் தன் மகன்களை அதில் உட்காரவைத்து ஒரு ரவுண்ட் அடித்து இறக்கியிருக்கிறார். இதே மாதிரி சில வேடிக்கையான சம்பவங்கள் எல்லாம் அரங்கேறியிருக்கிறது படத்தின் இசை வெளியீட்டு விழாவில்.
Nayanthara: கடந்த…
TVK Vijay:…
TVK Vijay:…
Karur: தவெக…
STR49: சினிமாத்துறை…