Categories: Cinema News latest news

சிம்பு அன்னைக்கு சொன்ன வார்த்தை…! வாழ்க்கையே மாறிப் போச்சு…! அனுபவத்தை பகிர்ந்த விக்னேஷ் சிவன்…

2012 ஆம் ஆண்டு சிம்பு மற்றும் வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்த படம் போடா போடி. இந்த படம் மியூஸிக் கலந்த காதல் காமெடி படமாக அமைந்தது. இதுதான் விக்னேஷ் சிவனுக்கு முதல் படமும் கூட.இந்த படத்திற்கு தரன்குமார் இசையமைத்திருந்தார். இந்த படம் தீபாவளியன்று விஜய் நடிப்பில் வெளியான துப்பாக்கி படத்துடன் மோதியதால் கலவையான விமர்சனங்களை தான் பெற்றது.

மேலும் விக்னேஷ் சிவனுக்கு சிம்பு சீனியராம் படிக்கும் காலத்தில். ஆகையால் விக்னேஷ் சிவன் இயக்குகிறார் என தெரிந்தும் ஹேய், நீயா இந்த படத்தை எடுக்குறனு ஆச்சரியமாக கேட்டாராம் சிம்பு. சிம்பு ஒரு நல்ல நடிகர், பன்முகத்திறமைகளை ஒருங்கே வாய்க்கப் பெற்றவர் என்று விக்னேஷ் சிவன் சிம்புவை பாராட்டி கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், ”சிம்பு ஏற்கெனவே கதையும் எழுதுவார், பாடலும் எழுதுவார், மியூஸிக்கும் வாசிப்பார், ஒரு தடவை நான் ஒரு பாட்டுக்காக வரிகள் எழுதிக் கொண்டிருக்கும் போது சிம்பு அதை வாங்கி பார்த்து இந்த இடத்துல இப்படி போடு, இப்படி வரிகள் எழுதுனு பக்கத்துல வந்து சொன்னார்”

அந்த ஒரு தூண்டுகோலுதான் நான் இந்த அளவுக்கு இப்படி ஒரு பாடலாசிரியராக வந்து நிற்கிறேன். எப்பவும் ஒருத்தரை தூக்கிவிட மற்றொருவர் வேண்டும், எனக்கும் அந்த நேரத்தில் சிம்பு இருந்தார் என்பது மாதிரியான கருத்துக்களை விக்னேஷ் சிவன் கூறினார்.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini