×

சிம்பு - யுவன் கூட்டணியில் ‘தப்பு பண்ணிட்டேன்’ - இன்று வெளியாகும் பாடல் வீடியோ... 
 

 
simbu

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் U1 ரெக்கார்ட்ஸ் தயாரிப்பில் உருவாகும் புதிய ஆல்பம் பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளார். அறிமுக இசையமைப்பாளர் A.K.ப்ரியன் இசையமைக்கும் இந்த புதிய பாடலை விக்னேஷ் ராமகிருஷ்ணா எழுதியுள்ளார். இந்த பாடலை தான் நடிகர் சிம்பு பாடியுள்ளார்.

நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் மற்றும் நடிகை மேகா ஆகாஷ் இணைந்து நடிக்கும் இப்பாடலுக்கு சாண்டி மாஸ்டர் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். இதற்கு முன் காளிதாஸ் ஜெயராமும், மேகா ஆகாஷ் இருவரும் ‘ஒரு பக்க கதை’ திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.

thappu

இயக்குனர் டாங்லி ஜம்போ இயக்கும் இப்பாடலுக்கு ‘மேயாத மான்’ திரைப்படத்தின் ஒளிப்பதிவாளரான விது அய்யனா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த பாடலுக்கு ‘தப்பு பண்ணிட்டேன்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இப்பாடல் வீடியோ இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது. சிம்பு ரசிகர்கள் இந்த பாடல் வீடியோவை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
 

From around the web

Trending Videos

Tamilnadu News