என் நெஞ்சே பிளக்கிறது.... பயமா இருக்கு - பாடகி சித்ரா வேதனை!
கேரளாவில் கொடூரம்:
கேரளாவை சேர்ந்த திருவனந்தபுரம் அருகே நெடுமங்காடு பகுதியில் ஒன்றரை வயது குழந்தையான ஹர்ஷத் என்ற ஆண் குழந்தை தனது தாயின் கள்ளக்காதலனால் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது நாடு முழுக்க பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது .
உணவுப் பொருள் உணவு குழாயில் சிக்கி கொண்டதாக கூறி குழந்தையின் தாய் மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார். அப்போது மருத்துவரின் தீவிர பரிசோதனைகளில் அந்த குழந்தை அணு அணுவாக சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

என் நெஞ்சே பிளக்கிறது:
இதை அடுத்து அந்த குழந்தை உடலில் 91 காயங்கள், தழும்புகள், 7 விலா எலும்புகளின் முறிவு மண்டையோட்டில் ஏற்பட்ட ரத்தக் கசிவு இப்படி மிகக் கொடூரமான மரணத்தை தழுவி இருக்கிறது . இந்த சம்பவம் நாடு முழுக்க பெரும் அதிர்வலை ஏற்படுத்தியது .
இதுகுறித்து பாடகி சித்ரா மிகுந்த வேதனையோடு தனது பதிவை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் கூறி இருப்பதாவது வெறும் ஒன்றரை வயதே ஆன குட்டி அர்ஷத்தின் மறைவு செய்தி என் நெஞ்சை பிளக்கிறது. மனம் அலைபாய்கிறது. பயமாக இருக்கிறது. இதுபோன்ற கொடூரமான சம்பவங்கள் இனி நடக்காமல் இருக்கட்டும். மனித சமூகம் தன்னைத்தானே சீர்திருத்திக் கொள்ள வேண்டும். பிரார்த்தனைகள் என பாடகி சித்ரா உருக்கமாக தனது வேதனையை பகிர்ந்து இருக்கிறார்.
