×

கார்த்திக்கு ஜோடியா? கொடூர வில்லியாக மாறும் சிம்ரன்... என்ன நடக்குது?

அந்தகன் படத்தில் சாதாரண வில்லி அல்ல மாறாக கொடூர வில்லியாக நடிக்கிறார் சிம்ரன்.

 
635e2b06-5b47-4df1-937d-b43e835a0ca8

கோலிவுட்டின் முன்னணி ஹீரோயினாக இருந்த சிம்ரன் திருமணம், குழந்தைகள் என்றான பிறகு ஒரு பிரேக் எடுத்துவிட்டு மீண்டும் நடிக்க வந்தார். அவரின் செகண்ட் இன்னிங்ஸ் வெற்றிகரமாக இல்லை. சிறு, சிறு கதாபாத்திரங்களில் அவர் நடிப்பதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள்.

இந்நிலையில் சிம்ரன் தன் ரூட்டை மாற்றிவிட்டார். குணச்சித்தர வேடங்களில் ஏன் நடிக்க வேண்டும் என்று வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க முடிவு செய்துவிட்டார். இந்நிலையில் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் சர்தார் படத்தில் நடிக்க சிம்ரனுக்கு வாய்ப்பு வந்திருக்கிறது.

சிம்ரன் வில்லியாக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. சர்தார் படத்தில் ராஷி கன்னா, கர்ணன் படம் புகழ் ரஜிஷா விஜயன் என்று இரண்டு ஹீரோயின்கள் இருக்கிறார்கள். முன்னதாக சர்தார் பட ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி அனைவரையும் கவர்ந்தது. சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் மிரட்டியிருந்தார் கார்த்தி.

சிம்ரன் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தாலும் அவரை வில்லியாக பார்க்கவும் ஆவலாக இருக்கிறார்கள். தன் அப்பா தியாகராஜன் இயக்கத்தில் பிரசாந்த் நடித்து வரும் அந்தகன் படத்தில் சாதாரண வில்லி அல்ல மாறாக கொடூர வில்லியாக நடிக்கிறார் சிம்ரன்.

கள்ளக்காதலுக்காக கணவரை கொலை செய்துவிட்டு அதை பார்த்த பிரசாந்தையும் ஒரு வழி செய்யத் துடிக்கும் கதாபாத்திரம் அவருக்கு.

சிம்ரன் ஹீரோயினாக வலம் வந்தபோதே பிரசாந்தின் பார்த்தேன் ரசித்தேன் படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதை பார்த்து ரசிகர்கள் யாரும் அவரை வெறுத்துவிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த தைரியத்தில் தான் தற்போது துணிந்து வில்லியாக நடித்து வருகிறார்.

From around the web

Trending Videos

Tamilnadu News