சிம்ரன் பிரசாந்த் ஜோடியின் ரொமான்டிக் டான்ஸ் - கலங்கிய கண்களுடன் ரசித்த சினேகா - வீடியோ!

 
simran prasanth


90ஸ் பெண்களின் கனவு நாயகன் ஆன நடிகர் பிரசாந்த் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து நட்சத்திர நடிகர் என்ற ஒரு அந்தஸ்தை பிடித்திருந்தார்.  இன்றைய காலத்தில் நடிகர் அஜித், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நடிகர்களைப் போல அன்றைய காலத்தில் பிரசாந்த் தான் சூப்பர் ஸ்டார் . அவருக்கு போட்டியே இல்லை அந்த அளவுக்கு அவர் நட்சத்திர ஹீரோவாக ரசிகர்களின் மனதில் ஒரு நல்ல இடத்தைப் பிடித்து வைத்திருந்தார் .

ஆனால், அவரது திருமண வாழ்க்கை துரதிஷ்டவசமாக சரியாக அமையவில்லை. பிறகு திரைப்பட வாய்ப்புகளும் இன்றி பிரசாந்த் பீல்டவுட் ஆகிவிட்டார். இந்த நிலையில் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியின் ஒளிபரப்பாகி வரும் நடன நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக பங்கேற்று வருகிறார் நடிகர் பிரசாந்த் .

jodi

அப்போது நடிகை சிம்ரன் பிரசாந்த் இருவரும் ஜோடி படத்தில் இடம்பெற்ற காதல் கடிதம் பாடலுக்கு ரொமான்டிக் நடனம் ஆடினார்கள். இந்த ஜோடி மீண்டும் ஸ்டேஜில் ரொமான்டிக் நடனம் ஆடுவதை பார்த்த நடிகை சினேகா கண்கலங்கி அவர்களை ரசித்தார். அந்த வீடியோ சமகவலைத்தளங்களில் வெளியாகிய வைரலாகி வருகிறது.

நடிகர் பிரசாந்தை மீண்டும் இப்படி பார்ப்பதற்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது. அவருக்கும் குடும்பம் மனைவி குழந்தைகள் என்று இருந்திருந்தால் எவ்வளவு அழகான வாழ்க்கை வாழ்ந்திருப்பார் என ரசிகர்கள் அவரின் நிலையை நினைத்து வேதனை அடைந்துள்ளனர்.

Tags

From Around the web