Connect with us
simran-monal

Cinema News

தற்கொலையால் உயிரிழந்த தங்கை- சிறு வயது புகைப்படத்தை பகிர்ந்து கண்ணீர் சிந்திய சிம்ரன்

திரையுலகில் அண்ணன் தம்பி நடிகர்கள் மற்றும் அக்கா தங்கை நடிகைகள் அதிகமாக உள்ளனர். இந்த வரிசையில் 90களில் பிரபலமான அக்கா தங்கை நடிகைகளாக வலம் வந்தவர்கள் தான் நடிகைகள் சிம்ரன் மற்றும் அவரது சகோதரி மோனல். இவர்கள் இருவரும் அந்த சமயத்தில் பிரபலமாக இருந்தனர்.

நடிகை சிம்ரன் திரையுலகில் நுழைந்த பின்னர் அவர் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் தான் நடிகை மோனல். இவர் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான பார்வை ஒன்றே போதுமே என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.

monal

பின்னர் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்த மோனல் யாரும் எதிர்பாராத நிலையில் திடீரென 2002ஆம் ஆண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது மரணத்திற்கு பல காரணங்கள் கூறப்பட்டது. அதில் ஒன்று தான் நடிகை மோனல் நடிகர் குணாலை காதலித்து அந்த காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டதாக கூறினார்கள்.

இவர் மட்டுமல்ல இவரை போல பல நடிகை மற்றும் நடிகர்கள் இதுவரை காரணமே தெரியாமல் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள். சரி நாம் விஷயத்திற்கு வருவோம். நடிகை மோனல் இறந்து கிட்டத்தட்ட 20 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் நடிகை சிம்ரன் தற்போது மோனலுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

simran insta

மேலும் “நீ இப்போது என்னுடன் இல்லாமல் இருக்கலாம். ஆனால் எப்போதும் நீ என்னுடன் தான் இருப்பாய் என்று எனக்கு தெரியும். உன்னை மிகவும் மிஸ் செய்கிறேன் ” என தனது தங்கை குறித்து நடிகை சிம்ரன் மிகவும் உருக்கமாக பதிவு செய்துள்ளார்.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top