எல்லாத்துக்கும் பேரம் பேசினாங்க…. சிம்ரனுக்கே இந்த நிலைமையா?
நடிகை சிம்ரன்:
நட்சத்திரம் நடிகை என்ற அந்தஸ்தை பிடித்திருந்தால் நடிகை சிம்ரன் தமிழ் சினிமாவில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னணி நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தை பிடித்தார். அஜித் விஜய் விக்ரம் சூர்யா என பல்வேறு டாப் ஹீரோக்களோடு ஜோடி போட்டு சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்தார்.
சிம்ரனின் பேட்டி:
இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடைய சினிமா அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்ட சிம்ரனின் பேச்சு தான் அனைத்து ரசிகர்களையும் கவலை அடைய செய்திருக்கிறது. அவர் கூறியதாவது, தமிழ் சினிமாவில் வெற்றி திரைப்படங்களில் நடித்து நட்சத்திர நடிகையாக இருக்கும் போதே பலமுறை பாலிவுட் படங்களில் நடிக்கும் வாய்ப்பு என்னை தேடி வந்தது.
ஆனால், நான் ஒரே ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை. வந்த வாய்ப்புகளை எல்லாம் தகர்த்து எறிந்துவிட்டேன். ஏனென்றால், அந்த மக்களுடன் என்னால் ஒன்றி போக முடியவில்லை. காரணம் தென்னிந்திய சினிமாவில் நான் நடித்த படங்களையோ அல்லது தென்னிந்தியர்களின் பாரம்பரத்தையோ அவர்கள் மதிப்பளிப்பதே இல்லை.
பேரம் பேசும் பாலிவுட்:
இந்த விஷயம் என்னை மிகவும் பாதிப்படையை செய்தது. அது மட்டும் இல்லாமல் பாலிவுட் சினிமாக்களில் மரியாதை என்பதே இருக்காது. என் வாழ்நாளில் பாதிக்கும் மேலான காலத்தை நான் சினிமாவுக்கு கொடுத்திருக்கிறேன். அப்படி இருந்தும் கூட எனக்கே மரியாதை கிடைக்க வில்லை என்றால் என்ன அர்த்தம்?
அது மட்டும் இல்லாமல் சில தயாரிப்பு நிறுவனங்கள் தங்குமிடம், என்னுடன் பயணிக்க கூடிய ஊழியர்களின் எண்ணிக்கை, அடிப்படை வசதி, ஹோட்டல், டிக்கெட்டுகள், இது எல்லாவற்றிலுமே பேரம் பேசுவார்கள். இந்த விஷயம் என்னை மிகவும் பாதித்தது.
எனவே இதுநாள் வரை நான் பாலிவுட் சினிமாவில் நடிக்க கூட யோசித்ததில்லை. இதை நான் வெளியில் வேறு எங்கும் பேசினதும் இல்லை. இப்படிப்பட்ட காரணத்தால் தான் நான் பாலிவுட் பக்கமே போனதில்லை என சிம்ரன் கூறியிருக்கிறார். நட்சத்திரம் நடிகையாக இருக்கும் சிம்ரனுக்கே இப்படி ஒரு நிலைமையா? பாலிவுட் காரங்க ரொம்ப மோசம்பா என ரசிகர்கள் சிம்ரனுக்கு ஆதரவாக பாலிவுட்டை விமர்சித்து வருகின்றனர்.
