சிங்கம் சூர்யா கேமியோ!.. கருப்பு படத்தின் கிளைமேக்ஸ் மேக்கிங் சீனை வெளியிட்ட ஆர்ஜே பாலாஜி!..

 
r.j.balaji

சூர்யாவின் கருப்பு திரைப்படம் உலகளவில் ரூ.230 கோடிக்கும் அதிகமான வசூலை எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை வசூல் மேலும் அதிகரிக்கும் என்கின்றனர். விரைவில் 300 கோடி வசூலை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ரசிகர்களை மேலும், தியேட்டருக்கு வரவழைக்க சூப்பரான சிங்கம் சீன் ரிவீலை படக்குழு செய்துள்ளது.

கருப்பு படத்தின் க்ளைமேக்ஸ் காட்சிகள் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது நடிகரும் இயக்குநருமான ஆர்.ஜே.பாலாஜி தனது சமூக வலைதளப் பக்கத்தில் கருப்பு படத்தின் க்ளைமேக்ஸ் மேக்கிங் வீடியோவை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். ஆக்‌ஷன், உணர்ச்சி, கிராமத்து மற்றும் சூர்யாவின் அதிரடி நடிப்பு ஆகியவை இணைந்த இந்த திரைப்படம், குடும்ப ரசிகர்களிடமும் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. சிங்கம் சூர்யாவாக கருப்பு படத்தில் மீண்டும் சூர்யா நடித்ததை பார்த்து ரசிகர்கள் தியேட்டர்களில் ஆரவாரம் செய்த நிலையில், கருப்பு படத்தில் சிங்கம் கேமியோ இருக்கா என படம் பார்க்காதவர்கள் ஆச்சர்யமடைந்து டிக்கெட் போட ஆரம்பித்துள்ளனர். 

அந்த வீடியோவில் படத்தின் இறுதிக்கட்ட சண்டைக் காட்சிகள் எவ்வாறு படமாக்கப்பட்டன, நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் எவ்வாறு உழைத்தனர் என்பதற்கான காட்சிகள் இடம்பெற்றிருந்தன. அன்பரிவு சகோதரர்கள் வடிவமைத்த ஆக்‌ஷன் காட்சிகள் படத்தின் முக்கிய பலமாக அமைந்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த பதிவுடன், “சிங்கம் சூர்யா சார் பாக்ஸ் ஆபிஸில் கர்ஜித்து வருகிறார்”. மேலும், “எனக்கு மிகவும் பிடித்த அன்பறிவ் மாஸ்டர் ஆக்‌ஷன் இயக்குநர்கள் கருப்பு படத்திற்காக ஒரு சிறப்பான பணியில் இறங்கியுள்ளனர்” என்றும் அவர் பாராட்டியுள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் கருப்பு படத்தின் வசூல் தொடர்ந்து அதிகரித்து வருவதால், விரைவில் புதிய சாதனைகளை படைக்கும் என்ற எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது. திரைப்பட விமர்சகர்களும் கருப்பு படத்தை சூர்யாவின் சமீபத்திய சிறந்த கம்பேக் படங்களில் ஒன்றாக பாராட்டி வருகின்றனர்.


 

Tags

From Around the web