Singapenne: ஆனந்தியின் விஷயம் மகேஷூக்கு தெரிந்ததா? அன்புவின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?
சிங்கப்பெண்ணே: ஆனந்தியின் கர்ப்பம் ரகசியமாக இருந்தது ஒரு டுவிஸ்ட். கோகிலா கல்யாணம் நடக்குமா, நடக்காதாங்கறது ஒரு டுவிஸ்ட். அன்புவுக்கு ஆனந்தியின் கர்ப்பம் தெரிந்து விடுமான்னு ஒரு டுவிஸ்ட். அன்பு என்ன சொல்வான்னு ஒரு டுவிஸ்ட். இப்ப மகேஷூக்கு ஆனந்தியின் கர்ப்பம் தெரிந்து விடுமோன்னு ஒரு டுவிஸ்ட். இந்த டுவிஸ்ட்கள் தான் சிங்கப்பெண்ணின் டிஆர்பியை எகிற வைக்கின்றன. அந்த வகையில் இன்று நடந்த எபிசோடின் தொகுப்பைப் பாருங்க.
அன்பு ஆனந்தியை வயிறு வலிக்காக ஆஸ்பத்திரிக்குக் கூட்டிச் செல்கிறான். அங்கு வழக்கமாக ஆனந்தியை செக்கப் பண்ணும் கவிதா டாக்டர் இருக்கிறார். அவரிடம் ஆனந்தி நடந்த விவரத்தைக் கூறுகிறாள். ஆனந்தியிடம் டாக்டர் அன்புவுக்கு உன்னோட கர்ப்பம் பற்றி தெரியுமான்னு கேட்க ஆமாம் என்று சொல்லும் ஆனந்தி நடந்த சம்பவங்களை ஒன்று விடாமல் சொல்கிறாள். ஆனந்தி சொன்னதும் அன்புவின் மேல் டாக்டருக்கு மரியாதை அதிகரிக்கிறது.
ஏன்னா கர்ப்பமா இருக்கும்போது கூட ஆனந்தியை ஏத்துக்கத் தயார் என்றும் அவள் களங்கமில்லாதவள் என்றும் ஆணித்தரமாக அன்பு நம்புகிறார். இதுவல்லவோ உன்னதமான காதல். இப்படி ஏத்துக்க எவ்ளோ பெரிய மனசு வேணும்? அன்பு எவ்வளவு ஒரு உன்னதமான மனிதர்… அவரைப் போய் முதல்ல தப்பா நினைச்சிட்டோமே என ஃபீல் பண்ணுகிறார். அதை அன்புவிடமும் அப்படியே சொல்கிறார்.
அன்பு தன்னோட உண்மையான ஆத்மார்த்தமான காதலைப் பற்றியும், ஆனந்தி குறித்தும் டாக்டரிடம் சொல்கிறான். ஆனந்தியும், நானும் உருவம் தான் வேற. ஆனா ரெண்டு பேரோட மனசும் ஒண்ணுதான். நான் நல்லாருக்கணும்னு அவ ஆசைப்படுவாள். அவள் நல்லாருக்கணும்னு நான் ஆசைப்படுவேன்.
அவளை என்னை வேணாம்னு ஒதுக்கினாலும் நான் விடமாட்டேன் என அன்பு சொல்லச் சொல்ல டாக்டர் இப்படி சொல்கிறார். கிராமத்து அப்பாவிப்பொண்ணான ஆனந்திக்கு யாருன்னே தெரியாம ஒரு கர்ப்பம். அவள் எப்படித்தான் சமாளிக்கப் போறாளோன்னு நினைச்சேன். ஆனா இப்போ நீங்க ஆதரவா இருக்குறதால எனக்கு அந்த நினைப்பு இல்ல.
ஆனா எந்த சூழலிலும் ஆனந்தி கவலைப்படாம நீங்க பார்த்துக்கணும். ஏன்னா இப்ப அவ மட்டும் கிடையாது. அவ வயித்துல வளர்ற கருவும் முக்கியம். இவ சந்தோஷமா இருந்தால்தான் கருவும் நல்லபடியா வளரும்னு டாக்டர் சொல்கிறார். அன்பு நான் ஆனந்தியை எப்பவும் சந்தோஷமா வச்சிருப்பேன். அது என்னோட பொறுப்பு என்கிறான்.
அந்த நேரம் மகேஷின் காரில் குறுக்கே ஒரு பெண் விழுந்து விபத்துக்கு ஆளாகிறாள். அவளை மகேஷ் அதே ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து வருகிறான். ஒரு பக்கம் அன்புவும், ஆனந்தியும் வெளியேறுகிறார்கள். மகேஷ் ஆனந்தியையும், அன்புவையும் பார்த்தானா? டாக்டர் மகேஷிடம் என்ன சொன்னார்? என்பதை நாளைய எபிசோடில் பார்க்கலாம்.
